12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் அரசுப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் நிலை என்ன என்பதை இதில் காணலாம்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்:
மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். மார்ச் 3ஆம் தேதி முதல் 25 வரை தேர்வு நடந்தது. இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. எனினும், ஒருநாள் முன்கூட்டியே 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது.
சென்ற ஆண்டை விட தேர்ச்சி % அதிகம்:
இந்த ஆண்டு தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,92,494 இதில் மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316, மாணவர்களின் எண்ணிக்கை : 3,73,178
தேர்ச்சி விவரங்கள்
- தேர்ச்சி பெற்றவர்கள் : 7,53,142 (95.03%)
- மாணவியர் 4,05,472 (96.70%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- மாணவர்கள் 3,47,670 (93.16%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- மாணவர்களை விட 3.54 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 10,049
- கடந்த மார்ச் 2024 பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.47% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.
கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 7,60,606 பேர் எழுதிய நிலையில் மொத்தம் 7,19,196 மாணவ தேர்ச்சி பெற்றனர்.தமிழ்நாட்டில் மொத்தம் 2478 பள்ளிகள் 100% தேர்ச்சியை அடை . இவற்றில் 397 பள்ளிகள் அரசுப் பள்ளிகள் ஆகும். ஒட்டுமொத்த கடந்த் ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56% ஆகும்
அரசுப்பள்ளிகள் - தனியார் பள்ளிகள்:
பிளஸ்-2 பொதுத்தேர்வில் மொத்தம் 3162 அரசுப்பள்ளிகளில் 3,51,205 மாணக்கர்கள் தேர்வு எழுதினர், இதில் 322912 பேர் தேர்ச்சி அடைந்தனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.94 சதவீகிதம் ஆகும். இதில் 88.50 சதவீகிதம் மாணவர்களும், மாணவிகள் 94.65 சதவீகிதம் ஆகும். மேலும் 436 பள்ளிகள் 100 சதவீகித தேர்ச்சி பெற்றது.
மறுப்பக்கம் தனியார் பள்ளிகளை பொறுத்த வரை வரை 3132 தனியார் பள்ளிகளில் 1938 பள்ளிகள் 100 சதவீகிதம் தேர்ச்சியை பெற்றன. மொத்தம் 2,48,492 மாணக்கர்களை தேர்வை எழுதினர், இதில் 2,45,701 மாணவ/மாணவிகள் தேர்ச்சி பெற்றனர், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 98.88 சதவீகிதம் ஆகும். இதில் 93.16 சதவீகிதம் மாணவர்களும், மாணவிகள் 96.70 சதவீகிதம் ஆகும்.
மேலும் அரசுப்பெறும் உதவிப்பெறும் 1219 பள்ளிகளில் மொத்தம் 192794 தேர்வெழுதிய நிலையில் 184529 தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீகிதம் 95.71 ஆக உள்ளது. இந்த முறை அரசுப்பள்ளிகளை காட்டிலும் தனியார் பள்ளிகள் 6.94 சதவிகீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளது.