விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 19,764 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 93.17 சதவீதம் ஆகும்.


விழுப்புரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் என 21213 பேர் தேர்வு எழுதினர். இதில் 10201 மாணவர்களில் 9224 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 977 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். 11012 மாணவிகளில் 10540 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 472 மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொத்தம் மாணவ, மாணவிகள் என 1449 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.


விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததையொட்டி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவுகளை வெளியிட்டார். www.tnresults.nic.in www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge.tn.gov.in தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு:


12ம் ஆண்டு வகுப்பு மாணவ, மாணவிகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 


இதில், தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெளியான தேர்வு முடிவுகள் அடிப்படையில் திருப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ஈரோடும், சிவகங்கை மாவட்டங்களும் உள்ளன. அரியலூர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 




Tamil Nadu 12th Result 2024 Centum Scorers: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு..?


தேர்வெழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை : 7,60,606


தேர்ச்சி பெற்றவர்கள் : 7,19,196


கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஒரு பாடத்தில் அதிக சதம்..!


கடந்த மே 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 22,957


இந்தாண்டு மார்ச்/ஏப்ரல் 2024 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் மொத்த எண்ணிக்கை : 26,352


அதிலும், குறிப்பாக தமிழ் மொழிப்பாடத்தில் 35 மாணவர்கள் சதம் அடித்துள்ளனர்.