பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்வர்கள்‌ - விடைத்தாள்‌ நகல்‌ / மறுகூட்டல்‌ விண்ணப்பிக்கும்‌ முறை:


விடைத்தாள்‌ நகல்‌ / மறுகூட்டல்‌ கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்கள்‌ வழியாகவும்‌ 07.05.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணி முதல்‌ 11.05.2024 ( சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌.


பன்னிரண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள்‌ வழியாக மதிப்பெண்‌ பட்டியலை 09.05.2024 முதல்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌ அல்லது தங்களது பிறந்த தேதி, பதிவண்‌ ஆகியவற்றைப் பதிவுசெய்து, www.dge.tn.nic.in இணையதளத்தில்‌ தாங்களே பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


தனித்தேர்வர்கள்‌ தங்களது பிறந்த தேதி, பதிவெண்‌ ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில்‌ தாங்களே பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


விடைத்தாள்‌ நகல்‌, மறுகூட்டல்‌ ஆகியவற்றில்‌ எதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள்‌ விண்ணப்பிக்க இயலும்‌. தேர்வர்கள்‌ தங்களது விடைத்தாளின்‌ நகல்‌ வேண்டுமா? அல்லது மதிப்பெண்‌ மறுகூட்டல்‌ செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன்பின்னர்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்‌கொள்ளப்படுகிறார்கள்‌. விடைத்தாள்‌ நகல்‌ பெற்றவர்கள்‌ மட்டுமே விடைத்தாள்‌ மறுமதிப்பீடு கோரி பின்னர்‌ விண்ணப்பிக்க இயலும்‌.


மதிப்பெண்‌ மறுகூட்டல்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ பாடத்திற்கு விடைத்தாள்களின்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்திட இயலாது. விடைத்தாளின்‌ நகல்‌ பெற்ற பிறகு அவர்கள்‌ மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்‌.


விடைத்தாளின்‌ நகல்‌ (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம்‌


ஒவ்வொரு பாடத்திற்கும்‌ - ரூ.275,


மறுகூட்டல் கட்டணம்‌


உயிரியல்‌ பாடத்திற்கு மட்டும்‌ - ரூ.305


ஏனையப்‌ பாடங்கள்‌ (ஒவ்வொன்றிற்கும்‌)- ரூ.205


பணம்‌ செலுத்தும்‌ முறை


தேர்வர்கள்‌ விடைத்தாள்களின்‌ நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.


விடைத்தாள்‌ நகல்‌ - இணையதளத்கில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளும்‌ முறை:


விடைத்தாள்‌ நகல்‌ விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும்‌ ஒப்புகைச்‌ சீட்டினை மாணவர்கள்‌ பாதுகாப்பாக வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. ஒப்புகைச்‌ சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப்‌ பயன்படுத்தியே தேர்வர்கள்‌ தங்களது விடைத்தாளின்‌ நகலினை இணையதளம்‌ வழியாக பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.nic.in