கடலூரில் தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய தனியார் பள்ளி மாணவி ராஜேஸ்வரி 600க்கு 474 மதிப்பெண் எடுத்துள்ளார்.


கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி சேர்ந்தவர் ரத்தின வடிவேல், பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றி வந்த இவர் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில் இயற்பியல் தேர்வு எழுதிய மார்ச் 15ஆம் தேதி அவரது தந்தை உயிரிழந்தார். 




தந்தை இறந்த நிலையிலும் மாணவி ராஜேஸ்வரி தந்தையை இழந்த சோகத்தோடு சென்று பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியது. இதில் ராஜேஸ்வரி 
600 க்கு 474 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். 


அப்பாவை போல அரசு பணியில் சேர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும், தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்பதையே லட்சியம் என கூறுகிறார். 


மேலும், இவர் தற்காப்பு கலையான கராத்தேவில் போட்டியிட்டு பதக்கங்களை வென்றுள்ளார். அந்தத் துறையிலும் சாதிக்க விரும்புவதாக மனைவி ராஜேஸ்வரி தெரிவித்தார்.




 


மாணவி ராஜேஸ்வரியின் தந்தை உயிரிழந்த அன்று அவருக்கு இயற்பியல் தேர்வு நடைபெற்றது. மிகுந்த மன இறுக்கத்தில் இருந்த ராஜேஸ்வரி அந்த ஆறாத துயரத்திலும் தேர்வை எழுதி முடித்தார். தற்போது வெளியான மதிப்பெண் பட்டியலில் தந்தை உயிரிழந்த அன்று நடைபெற்ற இயற்பியல் பாடத்தில் மட்டுமே சற்று குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளார். மற்ற தேர்வுகள் அனைத்திலும் அதிக மதிப்பெண்களே பெற்றுள்ளார். 


12ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் இயற்பியல் பாடத்தில் 40 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மற்ற அனைத்து பாடங்களிலும் 50க்கும் மேற்பட்ட மதிப்பெண்களையே பெற்றுள்ளார். 


தமிழகத்தில் வெளியான தேர்வு முடிவுகள் விவரம்


தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்வி பாடத்திட்டத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது. சுமார் 7,80,550 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்றது.  இதில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.


இந்நிலையில் திட்டமிட்டபடி மே 6ஆம் தேதியான இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.70 சதவிகிதம் ஆகவும், அரசு பள்ளிகளில் 91.32  சதவிகிதம், அரசு உதவி பெறும் பகுதிகளில் 95.49 சதவிகிதம் ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.58 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு காண முடிவு வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கீழ்க்கண்ட இணைய வழி மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


www.dge1.tn.nic.in , 
www.dge2.tn.nic.in , 
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in


ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.