Thiruvannamalai Pass Percentage, TN 12th Result 2023: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. குறிப்பாக மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு, ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுதினர்.


பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் மாநில அளவில் 35 வது இடம் பிடித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவ மற்றும் மாணவிகளின் எண்ணிக்கை 27865. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 25022 . தேர்ச்சி சதவீதம் 89.80. தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை, 14329 தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 11554 . மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85.36. தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை 14329, தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 13468. தேர்ச்சி விகிதம் 93.99. திருவண்ணாமலை மாவட்டத்தின் அரசு பள்ளி தேர்ச்சி விகிதம், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 146 பள்ளியை சேர்ந்த 19610 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்ச்சி  பெற்றவர்கள் 17042. தேர்ச்சி விகிதம் 86.90 ஆகும்.


 




எப்படிப் பார்ப்பது?


மாணவர்கள் 


www.dge1.tn.nic.in , 
www.dge2.tn.nic.in , 
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in 


ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.


பிற வழிகள் 


மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.


அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


மேலும் மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tamil Nadu 12th Result 2023 LIVE Updates- பிளஸ் 2 தேர்வு முடிவுகள் LIVE