மாநிலம் முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (மார்ச் 1) தமிழ் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு எப்படி இருந்தது என்று காணலாம்.


12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு


தமிழ்நாட்டில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 22 ஆயிரம் 200 மாணவ, மாணவிகள்  மாணவர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். அதில், 3 லட்சத்து 58 ஆயிரத்து 201 மாணவர்கள், 4 லட்சத்து 13 ஆயிரத்து 99 மாணவிகள் மற்றும் ஒரு பாலினத்தவர் அடங்குவர். இதனைத் தவிர தனித்தேர்வர்கள் 21 ஆயிரத்து 875 பேரும், சிறைவாசிகள் 125 பேரும் பொதுத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தனர்.


3,302 தேர்வு மையங்கள்


தமிழ்நாட்டில் 3,300-க்கும் மேற்பட்ட மையங்களில் மாணவர்கள் தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பாக கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடித்தல், விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களை பிடிக்க 3,200 பறக்கும் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


தேர்வு அறை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்


 மேலும், தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடித்தல், விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களை பிடிக்க 3,200 பறக்கும் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தேர்வறைக்குள் மாணவர்கள் செல்போன், மின்சாதானங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


மோனிகா, புனித அன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி


இன்று தமிழ் தேர்வு எளிதாகவே இருந்தது. எனினும் முழுமையாக எழுதுவதற்கான நேரம் எனக்கு போதிய அளவில் கிடைக்கவில்லை. ஒரு மதிப்பெண் கேள்விகளும் எளிமையாக இருந்தன. புத்தகத்துக்குப் பிறகு இருக்கும் கேள்விகளே பெரும்பாலும் கேட்கப்பட்டிருந்தன. ஒருசில கேள்விகள் மட்டும் புத்தகத்துக்கு உள்ளே இருந்து கேட்கப்பட்டன.


இலக்கணத்தில் இருந்து அதிக அளவில் கேள்விகள் கேட்கப்படவில்லை. உரைநடை, துணைப் பாடம் சார்ந்தே கேள்விகள் இருந்தன. அதேபோல கடந்த ஆண்டு பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் நிறைய இந்த முறையும் இடம்பெற்று இருந்தன. மொத்தத்தில் தமிழ் தாள் எளிமையாக இருந்தது. 


சிவா, டான் பாஸ்கோ பள்ளி, சென்னை


ப்ரெஞ்ச் பாடம் மிகவும் எளிதாகவே இருந்தது. அனைத்துக் கேள்விகளுக்கும் புத்தகத்துக்குப் பின்னால் இருந்து மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. எப்படியும் 90 மதிப்பெண்களுக்கு மேல் வரும் என்று நம்புகிறேன்.


அனுஷ், அரசு சைதாப்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளி


தேர்வு கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் பாஸாகி விடுவேன். மதிப்பெண்கள் கொஞ்சம் குறைந்துவிடும் என்று நினைக்கிறேன். கேள்விகளை முடிக்க மட்டும் நேரம் போதவில்லை. 


இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.