12th Practical Exam: நாளை தொடங்கும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள்: முக்கிய வழிகாட்டல்கள் வெளியீடு- என்னென்ன?

12th Practical Exams 2024: மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் சுமார் 6 லட்சம் மாணவர்கள், இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

Continues below advertisement

12ஆம் வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை (பிப்.12) செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் சுமார் 6 லட்சம் மாணவர்கள், இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

Continues below advertisement

12ஆம் வகுப்பு பொதுத்‌ தேர்வை எழுதும்‌ மாணவர்களுக்கு செய்முறைத்‌ தேர்வுகள்‌, எழுத்துத்‌ தேர்வுகளுக்கு முன்னதாக நடத்தப்படவேண்டும். தேர்வின்போது மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். செய்முறை தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பிப்ரவரி 17-ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வு

இதற்காக அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் செய்முறை தேர்வுக்கு தேவையான ஆய்வகங்களில் உள்ள பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். எந்தவித குளறுபடிக்கும் இடம் இல்லாமல், பிப்ரவரி 17-ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். ஒரு முறைக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

17ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை நடத்தி, தேர்வுக்கான பட்டியலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிப்.19ஆம் தேதிக்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்களை இணையதளம்வழி பதிவேற்றம்செய்தல்

அதேபோல அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்கள்‌ தங்கள்‌ மாவட்டத்தில்‌ உள்ள பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட அனைத்துப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கும்‌ வழங்கப்பட்ட செய்முறைத்‌ தேர்வு மதிப்பெண்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ வாயிலாக தங்களுக்கு வழங்கப்பட்ட யூசர் ஐடி மற்றும்‌ பாஸ்வேர்டை பயன்படுத்தி, பதிவேற்றம்‌ செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌. இந்தப் பணிகளை பிப்ரவரி 16 முதல் 21ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள்‌ மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்கள்‌ அனைவரது செய்முறைத்‌ தேர்வு மதிப்பெண்களும்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளதா என்பதை அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்கள்‌ உறுதி செய்து கொள்ள வேண்டும்‌. எந்த ஒரு மாணவரது மதிப்பெண்களும்‌ பதிவேற்றம்‌ செய்யப்படாமல்‌ இருத்தல்‌ கூடாது.

இணையதளம்‌ வாயிலாக செய்முறைத்‌ தேவு மதிப்பெண்களை பதிவேற்றம்‌ செய்யும்‌ பணி நிறைவடைந்த பின்பு, அனைத்து மேல்நிலைப்‌ பள்ளிகளின்‌ மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு செய்முறைத்‌ தேர்வு மதிப்பெண்‌ பட்டியல்‌ கட்டுகளை (உரிய இணைப்புகளுடன்‌) பள்ளி எண்‌ வாரியாக கட்டுகளாகக்‌ கட்டி, சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்கள்‌ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்‌ என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola