விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்கள்‌ வழியாகவும்‌ 13.05.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணி முதல்‌ 17.05.2025 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌.

Continues below advertisement


2025ஆம் ஆண்டு மார்ச்‌ மாதம் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ மதிப்பெண்‌ பட்டியல்‌ பதிவிறக்கம்‌ செய்தல்‌ & விடைத்தாள்‌ நகலுக்கு விண்ணப்பித்தல்‌ தொடர்பாக அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளதாவது:


மதிப்பெண்‌ பட்டியல்‌ பதிவிறக்கம்‌ செய்தல்‌:


மார்ச்‌ - 2025 பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள்‌ வழியாக மதிப்பெண்‌ பட்டியலை (Statement of Marks) 12.05.2025 அன்று காலை 11.00 மணி முதல்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌.


அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification பகுதியில் சென்று HSE -II Year March-2025 - Statement of Marks பக்கத்தில் தங்களின் பிறந்த தேதி, பதிவெண்‌ ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.


தனித்தேர்வர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ Notification பகுதியில் சென்று HSE -II Year March-2025 - Statement of Marks பக்கத்தில் தங்களின் பிறந்த தேதி, பதிவெண்‌ ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.


விடைத்தாள்‌ நகலுக்கு விண்ணப்பம்‌ செய்தல்‌ 


விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்கள்‌ வழியாகவும்‌ 13.05.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணி முதல்‌ 17.05.2025 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌. 11ஆம் வகுப்பு Arrear தேர்வர்களும்‌ விடைத்தாள்‌ நகல்‌ கோரி மேற்கண்ட நாட்களில்‌ விண்ணப்பிக்கலாம்‌.


ஒவ்வொரு பாடத்திற்கும்‌ விடைத்தாளின்‌ நகல்‌ (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம்‌ ரூ.275. தேர்வர்கள்‌ விடைத்தாள்களின்‌ நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.


மறுகூட்டல்‌ / மறுமதிப்பீடு எப்படி?


விடைத்தாள்‌ நகல்‌ பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர்‌ மறுகூட்டல்‌ / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்‌.


விடைத்தாளின்‌ நகலினை இணையதளம்‌ வழியாக பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டிய நாள்‌ பின்னர்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌.  விடைத்தாள்‌ நகல்‌ பெற்ற தேர்வர்களுக்கு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர்‌ அறிவிக்கப்படும்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.