Kia Carens Clavis Features: கியா நிறுவனத்தின் புதிய காரென்ஸ் கிளாவிஸ் மாடலின், ஒவ்வொரு ட்ரிம்மிலும் வழங்கப்பட்டுள்ள இன்ஜின் ஆப்ஷன்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

கியா காரென்ஸ் கிளாவிஸ்:

கியா நிறுவனத்தின் காரென்ஸ் கிளாவிஸ் கார் மாடலானது ஃபேச்லிப்ட் செய்யப்பட்ட, காரென்ஸ் மல்டி பேசஞ்சர் வாகனமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கவனத்தை ஈர்க்கக் கூடிய விரிவான வெளிப்புற மேம்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, EV6  ஃபேஸ்லிஃப்டில் இருப்பது போன்ர திருத்தப்பட்ட முகப்பு விளக்கு, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், அப்டேட் செய்யப்பட்ட பின்புற பார் என பல அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக, உட்புறத்தில் அம்சங்களின் அடிப்படையிலும் பல மாற்றங்களை கண்டுள்ளது. காரென்ஸ் கிளாவிஸ் மாடலுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது.

காரென்ஸ் கிளாவிஸ் வேரியண்ட்ஸ்:

கியாவின் புதிய காரென்ஸ் கிளாவிஸ் கார் மாடலானது, காரென்ஸில் உள்ள அதே இன்ஜின் அம்சங்களை தொடங்கிறது. அதன்படி, 115எச்பி ஆற்றலை வழங்கக் கூடிய 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனை கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 6 ஸ்பீட்மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வேர்டர் ஆட்டோமேடிக் ட்ரான்ச்மிஷன் ஆப்ஷனை கொண்ட 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினை கொண்டுள்ளது.  6 ஸ்பீட் இண்டகிரேடட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன், 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது. அதேநேரம், காரென்ஸ் கார் மாடலில் இல்லாத,  6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் ஆனது  புதிய காரென்ஸ் கிளாவிஸின் டர்போ பெட்ரோல் இன்ஜினில் உள்ளது. இந்த கார் மாடலானது, HTE, HTE (O), HTK, HTK+, HTK+(O), HTX  மற்றும் HTX+ என 7 ட்ரிம்களில் கிடைக்கிறது.

Continues below advertisement

ஒவ்வொரு வேரியண்டிலும் உள்ள அம்சங்கள்:

1. காரென்ஸ் கிளாவிஸ் HTE:

இன்ஜின், கியர்பாக்ஸ் ஆப்ஷன்: 1.5P MT, 1.5D MT

  • முன் மற்றும் பின்புஸ் ஸ்கிட் பிளேட்கள்
  • ஸ்டாப் லேம்ப் உடன் பின்புற ஸ்பாய்லர்
  • 16 இன்ச் ஸ்டீல் வீல்ஸ் (டீசல்)
  • 15 இன்ச் க்ளோஸ் பிளாக் அலாக் வீல்ஸ் (பெட்ரோல்)
  • பிளாக் பேக் டூயல் டோன் உட்புற ஸ்கீம்
  • பிளாக் நேவி ப்ளூ செமி லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி
  • பிளாக் மெடல் ட்ரிம் உடன் இண்டிகோ கலர்ட் டேஷ்போர்ட்
  • இரண்டாவது வரிசைக்கு ஒன் டச் எலெக்ட்ரிக் ட்ரம்பிள் ஃபங்சன்
  • இரண்டாவது, மூன்றாவது வரிசை ஏசி வெண்ட்கள்
  • பர்க்லர் அலாரம் உடன் சாவி இல்லாத எண்ட்ரி
  • ஸ்லைடிங், ரிக்ளைனிங், டம்பிள் உடன் கூடிய இரண்டாவது இருக்கை 60:40 ஸ்ப்லிட் சீட்ஸ்
  • செகண்ட் ரோ சீட் பேக் ஃபோல்டிங் ஆர்ம்ரெச்ட் (7 சீட்டர்)
  • ரிக்ளைனிங், ஃபுல் பிலாட் போல்டிங் உடன் கூடிய மூன்றாவது வரிசை 50:50 சீட்கள்
  • மேனுவலி அட்ஜெஸ்டட் ட்ரைவர் சீட்
  • முற்றிலும் பவர்ட் விண்டோஸ்
  • சன்கிளாச் ஹோல்டர்
  • ரியர் சன்ஷேட்ஸ்
  • ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்ஸ்
  • டில்ட் அட்ஜெஸ்ட் உடன் கூடிய எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங்
  • 4.2 இன்ச் கலர் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே
  • 12V பவர் அவுட்லெட்
  • 5 USB டைப்-C போர்ட்
  • ரியர் ஆக்குபண்ட் அலெர்ட்
  • 6 ஏர்பேக்குகள்
  • எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்
  • ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல்
  • வாகன ஸ்டெபிலிட்டி மேனேஜ்மெண்ட்
  • டவுன்ஹில் பிரேக் கண்ட்ரோல்
  • EBபிரேக் அசிஸ்ட்
  • 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்ஸ்

2. காரென்ஸ் கிளாவிஸ் HTE(O):

இன்ஜின், கியர்பாக்ஸ் ஆப்ஷன்: 1.5P MT, 1.5D MT, 1.5P Turbo MT

HTE மாடலில் இருப்பதை விட சிறந்த அம்சங்கள்

  • ஷார்க் ஃபின் ஆண்டென்னா
  • உட்கட்டமைக்கப்பட்ட எல்இடி இண்டிகேட்டருடன் கூடிய எலெக்ட்ரிகல்லி அட்ஜெஸ்டபள் ORVMs
  • ஆட்டோமேடிக் லைட் கண்ட்ரோல்
  • ஸ்டியரிங் மவுண்டட் ஆட்டோ கண்ட்ரோல்ஸ்
  • வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் கார்பிளே உடன் கூடிய 8.0 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டச்ஸ்க்ரீன்
  • இரண்டு ட்வீட்டர்களுடன் கூடிய 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்
  • டைனமிக் கெயிட்லைன்ஸ்களுடன் கூடிய ரியர்வியூ கேமரா
  • ப்ளூடூத் மற்றும் வாய்ஸ் ரிகனைஷேஷன்

3. காரென்ஸ் கிளாவிஸ் HTK:

இன்ஜின், கியர்பாக்ஸ் ஆப்ஷன்: 1.5P MT, 1.5D MT, 1.5P Turbo MT

HTE (O) மாடலில் இருப்பதை விட சிறந்த அம்சங்கள்

  • பகல் நேரங்களில் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகள்
  • இண்டகிரேடட் ரூஃப் ரெயில்ஸ்
  • பிளாக் பேக் டூயல் டோன் உட்புற ஸ்கீம்
  • பிளாக் ஃபேப்ரிக் லெதரெட் சீட் அப்ஜோல்ஸ்ட்ரி
  • பிலாக் மெடல் ட்ரிம் உடன் பிளாக் டேஷ்போர்ட் 
  • ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல்
  • சீட் பேக் பேக்கட்ச்
  • ஆண்டி பிஞ்ச் பங்சனுடன் கூடிய ஒண்டன் ஆட்டோ அப்/டவுன் ட்ரைவர் விண்டோ
  • பூட் லேம்ப்
  • ஃப்ரண்ட் பார்கிங் சென்சார்ஸ்

4. காரென்ஸ் கிளாவிஸ் HTK+ :

இன்ஜின், கியர்பாக்ஸ் ஆப்ஷன்: 1.5D MT/AT, 1.5P Turbo MT/DCT

HTK மாடலில் இருப்பதை விட சிறந்த அம்சங்கள்

  • LED கனெக்டட் டெயில் லேம்ப்ஸ்
  • விண்டோ லைனில் சாடின் க்ரோம் ஃபினிஷ்
  • ஆட்டோ ஃபோல்டிங் ORVMs
  • ரியர் வைப்பர், வாஷர், டி-ஃபாகர்
  • மோஷன் சென்சார் மற்றும் ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் ஃபங்சன் கொண்ட ஸ்மார்ட் கீ
  • ஸ்டார்ட்/ஸ்டாப்பிற்கு புஷ் பட்டன்
  • க்ரூஸ் கண்ட்ரோல்
  • தேர்வு செய்யக்கூடிய ட்ரைவ் மோட்கள்: எகோ, நார்மல், ஸ்போர்ட்ஸ் (7 DCT/AT)
  • ஆட்டோ அப்ஜோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் பிரேக் (7 DCT/AT)

5. காரென்ஸ் கிளாவிஸ் HTK+ (O) :

இன்ஜின், கியர்பாக்ஸ் ஆப்ஷன்: 1.5D MT, 1.5P Turbo MT/DCT

HTK+ மாடலில் இருப்பதை விட சிறந்த அம்சங்கள்

  • 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள்
  • சிங்கிள் பேன் எலெக்ட்ரிக் சன்ரூஃப்
  • எல்இடி கேபின் லைட்ஸ்
  • வயர்லெஸ் சார்ஜர்

6. காரென்ஸ் கிளாவிஸ் HTX :

இன்ஜின், கியர்பாக்ஸ் ஆப்ஷன்: 1.5D MT, 1.5P Turbo MT/DCT

HTK+(O) மாடலில் இருப்பதை விட சிறந்த அம்சங்கள்

  • LED ஹெட்லைட்ஸ்
  • முன்புற மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்களில் சாடின் க்ரோம் ஃபினிஷ்
  • பகல்நேரங்களில் ஒளிரக்கூடிய எல்இடி இண்டகிரேடட் டர்னிங் சிக்னல்ஸ்
  • 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங்
  • பிளாக் நேவி ப்ளூ டூயல் டோன் இண்டீரியர் ஸ்கீம், லெதரேட் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி
  • லெதரெட் ராப்ட் ஸ்டியரிங் வீல்
  • டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப் (1.5P Turbo)
  • சிங்கிள் பேன் எலெக்ட்ரிக் சன்ரூஃப் (1.5D)
  • இன்ஃபோடெயின்மெண்ட்/ டெம்பரேட்சர் கண்ட்ரோல் ஸ்வாப் சுவிட்ச்
  • கியா கனெக்ட் கண்ட்ரோல்ஸ் உடன் கூடிய ஆட்டோ டிம்மிங் IRVM
  • ஸ்டியரிங் வீலுக்கான டெலிஸ்கோபிக் அட்ஜெஸ்ட்மண்ட்
  • கப் மற்றும் டிவைஸ் ஹோல்டர்களுடன் ரெட்ராக்ட்ரபிள் சீட் பேக்
  • அனைத்து ஜன்னல்களுக்கு வாய்ஸ் கமாண்டுகளுடன் கூடிய ஆட்டோ அப்/டவுன்
  • ஸ்மார்ட் கீ உடன் கூடிய அனைத்து ஜன்னல்களுக்குமான ஆட்டோ அப்/டவுன்
  • செண்டர் கன்சோலில் கூல்ட் கப்ஹோல்டர்ஸ்
  • இரண்டாவது இருக்கையில் கூல்ட் கேன் ஹோல்டர்ஸ்
  • இரண்டாவது வரிசையில் எல்இடி பெர்சனல் லேம்ப்
  • மொபைல் செயலியுடன் கூடிய டூயல் கேமரா டேஷ்கேம்
  • சாட்-நேவ் மற்றும் கியா கனெக்ட் உடன் கூடிய 12.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டச்ஸ்க்ரீன்
  • 12.25 இன்ச் ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்
  • ஓவர் தி ஏர் அப்டேட்ஸ்
  • டிஸ்பிளே உடன் கூடிய ஏர் பியூரிஃபயர்
  • பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் உடன் கூடிய 360 டிகிரி கேமரா

7. காரென்ஸ் கிளாவிஸ் HTX+ :

இன்ஜின், கியர்பாக்ஸ் ஆப்ஷன்: 1.5P Turbo MT/DCT/iMT

HTX மாடலில் இருப்பதை விட சிறந்த அம்சங்கள்

  • இரண்டாவது வரிசையில் ஸ்லைடிங், ரிக்ளெய்னிங், டம்பள் உடன் கூடிய கேப்டன் சீட்ஸ் (6 சீட்டர்)
  • கியா லோகோ புரஜொக்சன் உடன் கூடிய ரியர் டோர் ஸ்பாட்
  • வெண்டிலேடட் ஃப்ரண்ட் சீட்ஸ்
  • 4 வழிகளில் எலெக்ட்ரிகல்லி அட்ஜஸ்டபள் ட்ரைவர் சீட்
  • ரெயின் சென்சிங் வைப்பர்ஸ்
  • முதல் வரிசை பயணிகள் இருக்கையில் ஸ்லைடிங் லிவர்
  • மொபைல் செயலியுடன் கூடிய டூயல் கேமரா டேஷ்கேம் (iMT, MT)
  • 8 ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம்
  • பேடல் ஷிஃப்டர்ஸ்
  • 20 செயல்முறைகளுடன் கூடிய லெவல் 2 ADAS

Car loan Information:

Calculate Car Loan EMI