தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் அர்ப்பணிப்பு மிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கிய பொதுத் தேர்வுக்கான 10, 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வங்கியை ABP Nadu சார்பில் தினந்தோறும் வெளியிட்டு வருகிறோம்.


அந்த வகையில் இன்று வரலாறு பாடத்துக்கான மாதிரி வினாத்தாளை இந்தக் கட்டுரையில் காணலாம்.


மாதிரி வினாத்தாள்             பன்னிரெண்டாம் வகுப்பு
                         


வரலாறு                   பகுதி l
                                            மொத்த மதிப்பெண்கள்  90
                                 20x1 =20
குறிப்பு:(1)அனைத்து வினாக்களுக்கும்  விடையளிக்க
              (2)கொடுக்கப்பட்டுள்ள மாற்று           விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைக்  தேர்த்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்..


1. சுயராஜியம் எனது  பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என கூறியவர்
அ). பாலகங்காதரதிலகர்
ஆ)தாதாபாய் நௌரோஜி இ)சுபாஷ்சந்திர போஸ்
 ஈ)பாரதியார்
2.கல்கத்தாவில் அணுசிலன் சமிதியை நிறுவியவர்
அ) புலின் பிஹரிதாஸ்                        ஆ)ஹேமசந்திர கானூங்கோ
இ) ஐதிந்தாரநாத் பானர்ஜி மற்றும் ப்ரிந்தர் குமார் கோஷ
ஈ) குதிராம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி
3. தென்னிந்தியாவில் தன்னாட்சி  இயக்கம் யாரால் துவக்கப்பட்டது?
அ)திலகர்  
ஆ)அன்னிபெசண்ட் 
இ)பி.பி. வாடியா
 ஈ)எச்.எஸ். ஆல்காட்
4. காந்தியடிகளின் அரசியல் குரு யார்?
ஆ) திலகர் 
ஆ)கோகலே 
அ) W.C. பானர்ஜி
இ) M.G ரானடே
5. முதலாவது பருத்தித்  தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு 
அ)1852 
ஆ) 1854 
இ)1861
 ஈ) 1865
6. இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர்
அ)இராஜாஜி


ஆ)ராம்சே மெக்டொனால்டு
இ) முகமதுஇக்பால்
 ஈ) சர் வாசிர் ஹசன்
7. சுபாஷ் சந்திரபோஸ் எந்த ஆண்டு காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டார்?
அ) 1988 
ஆ) 1939 
இ)  1940
 ஈ).  1942
8. மொழிவாரி அடிப்படையில்
அமைக்கபட்ட முதல் மாநிலம்
அ) காஷ்மீர் 
ஆ) அஸ்ஸாம்  
இ)ஆந்திரா
 ஈ)ஓரிஸா
9. இந்திய அரசாங்கம் வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
அ)முதலாளித்துவ 
ஆ) சமதர்ம 
இ)தெய்வீக 
ஈ) தொழிற் சாலை     
10. சரியான விடையைத் தேர்வு செய்க
கூற்று: ஜமினிதார் முறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில்
ஒரு பகுதியை எட்டியது..
காரணம்: பல நிலச் சுவான்தார்கள் குத்தகை தாரர்களை
வெளியேற்றி நிலத்தை அவர்களது கட்டு பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்
அ).கூற்று மற்றும் காரணசரி காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ)கூற்று மற்றும் காரணம் சரி.காரணம் கூற்றை விளக்கவில்லை
இ)கூற்று சரி காரணம் தவறு
ஈ.கூற்று தவறு காரணம் சரி.
11. நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருத படுவர்
அ) அரிஸ்டாடில்
ஆ)பிளாட்டோ 
 இ)ரோஜர்பேக்கன்
 ஈ)வாண்டஸ்டெய்னர்.
12) மெகல்லணின் மறைவுக்குப் பிறகு எந்தக் கப்பல் திரும்பியது?
அ. சாண்டாமரியா
 ஆ பிண்ட்டா 
இ)நினா
ஈ) விட்டோரியா
13)நியூ ஆம்ஸ்டர்டாமிற்கு என  மறுபெயர் சூட்டப்பட்டது.
அ) வாஷிங்டன்
ஆ) நியூமார்க்
இ) சிக்காகோ
 ஈ) ஆம்ஸ்டர்டாம்
14)அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கிலப் படைகளுக்குத் தலைமை
தாங்கியவர்
அ) ரிச்சட்டு லீ 
ஆ)ஜார்ஜ் வாஷிங்டன்
 இ)வில்லியம் ஹோவே
ஈ) ராக்கிங்காம்.
15)பதினாறாம் லூயின் அதிகார பூர்வமான வசிப்பிடமாக இருந்தது 
அ. வெர்செய்ல்ஸ்
ஆ) தெளலன்
இ) மார்செய்லஸ்
ஈ) டியூலெர்ல்
16) இரு உலகங்களின் நாயகன்" என கொண்டாடப்படுபவர் ஆவார்
அ) சார்லஸ் ஆல்பரட்
ஆ)பிஸ்மார்க்
இ)மூன்றாம் நெப்போலியன்
ஈ) கரிபால்டி
17 எந்த நாடு 21 நிர்பந்தங்களை புதிதாக உருவாக்கப்பட்ட
சீன குடியரசின் தலைவர் முன் சமர்ப்பித்தது?
அ).பிரான்ஸ்
 அ.ரஷ்யா 
இ. ஜப்பான்
 ஈ   பிரிட்டன்
18 கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பொருத்தி சரியான விடையைத் சேர்ந்தெடுக்க.
அ. மைக்கேல் பாரடே -ஆர்க்ரைட்
ஆ எலியாஸ் ஹோவே-ராபர்ட்புல்டன்
இநீர்ச்சட்டகம்-மின்சாரம்
ஈ நீராவிப்பட்கு -தையல் இயந்திரம்
அ)1.3.4.2
ஆ)1 4.2.3. 
இ)3.4.1,2 
ஈ )3.4.1.2
19 பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பியக் கண்டத்திற்குள் தொழிற்துறையில்
வலிமையான சக்தியாக நாடு உருவாகியிருந்தது.
அ)பிரான்ஸ் 
ஆ)ஸ்பெயின்
இ)ஜெர்மனி
ஈ)அஸ்திரியா
20) அணிசேரா இயக்கத்தின் முதல் உச்சி மாநாடு இல் நடைபெற்றது
அ. பெல்கிரேடு
ஆ. பெய்ஜிங்
இ. பாண்டுங்
 ஈ. பாலி
                         பகுதி   ll        7 x 2 = 14
குறிப்பு: எவையேனும் ஏழு வினாக்களுக்கு  விடையளிக்கவும் வினா எண் 30க்கு கட்டாயமாக விடையளிக்கவும்


21.இல்பர்ட் மசோதாவின் 
முக்கியத்துவத்தை விவாதி.
22. பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்கள் கண்டறிக
23.கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான பின்னணி என்னவாக இருந்தது?
24 இந்திய பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?'
25. மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு
ஆதரவாக   வாதாடிய வழக்கறிஞரை அடையாளப்படுத்துக.
26 லாகூர் தீரீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன ?
27 இணைப்புறுதி ஆவணம் பற்றி நீவிர் அறிவது யாது?
28. பாஸ்டன் தேநீர் விருந்து குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
29. இரவலர் சட்டங்கள் பற்றி விவரமாக எழுதுக
30. நிகிலிசம் என்றால் என்ன?



                         பகுதி  lll            7 x 3 = 21
குறிப்பு : பின்வரும் வினாக்களில் எவையேனும் ஏழு வினாக்களுக்கு
சுருக்கமாக விடையளிக்கவும். வினா எண் 40 க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.


31. பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில்
பத்திரிக்கைகளின் பங்கினை. எழுதுக.
32. 1908 இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் பற்றி நீவிர் அறிவது யாது?
33. தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்களை பற்றி விவாதிக்கவும்.
34.டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISC0) பற்றி குறிப்பு எழுதுக.
35. 1921 இல் நடைபெற்ற மலபார் கலக த்தைப் பற்றிய
காந்தியடிகளின் கருத்து என்ன ?
36. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத
அமைப்புகளின் பெயரை எழுதுக?
37. இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவுகள் யாவை ?
39 ஐரோப்பாவில் எதிர் சீர்திருந்த இயக்கத்துக்கு இயேசு சபையின் பங்களிப்பு பற்றி விவாதிக்கவும்.
39. மிக ஆபத்தான U-படகுகள் மற்றும் Q-கப்பல்கள் பற்றி நீவிர் அறிந்தது என்ன?
40. சூயஸ் கால்வாய் சிக்கல் குறித்து சுருக்கமாக வரைக.
                       


பகுதி - IV
குறிப்பு: அனைத்து வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.
                                                        7×5=35
41) அ) பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு தோன்ற
காரணமான சமூக பொருளாதாரக் காரணிகளை ஆய்க
                         (அல்லது)
ஆ. இந்திய தேசிய இயக்கத்தில் வ.உ.சிதம்பரத்தின் பங்கினைப் பற்றி எழுதுக.
42). (அ) இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.
                         (அல்லது)
ஆ) ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்திய தேசியத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன ?
43. அ). வெளிளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்.
                       (அல்லது)
ஆ)முதல் ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை  மதிப்பிடுக
44. பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை ? ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு ஒருங் கிணைத்தார்.
                    (அல்லது)
ஆ). முதல் உலகப் போரின் காரணங்களையும் விளைவுகளையும் கணக்கிடுக.
45.(அ) சீனாவில் பொதுவுடைமை அரசு உருவாக மாசே-துங்கின்
பங்களிப்பை விவரித்து எழுதுக.
                 (அல்லது)
(ஆ) அணிசேரா இயக்கத்தின் இலக்குகளையும் நோக்கங்களையும்
கோடிட்டுக் காட்டவும்.
46.(அ) லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை
முன்னிலைப்படுத்துக.
                  (அல்லது)
ஆ). உலக வரைபடத்தில் பின்வரும் இடங்களை குறிக்கவும்.
1) . பிரான்சு 2. இத்தாலி 3. ஜெர்மனி 4. ஆஸ்திரியா 5. செர்பியா
47. அ) இத்தாலிய மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர மக்கள் ஆற்றிய பங்களிப்பை ஆராய்க
                      (அல்லது)
ஆ) இரண்டாம் உலகப்போரின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஏதேனும் ஐந்தினை காலக்கோடிட்டு .காட்டவும்.


மாதிரி வினாத்தாள் உருவாக்கம்


ச.மலர்விழி (A3 குழு), 






எம்.பி.என் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,


குரோம்பேட்டை செங்கல்பட்டு மாவட்டம்.


இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.