பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி 1ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி 2ல் கேள்வி எண் 29ஐ எழுதியவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
வினா எண் தவறாக இருந்ததாக புகார் எழுந்த நிலையில் அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.