தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் அர்ப்பணிப்பு மிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கிய பொதுத் தேர்வுக்கான 10, 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வங்கியை ABP Nadu சார்பில் தினந்தோறும் வெளியிட்டு வருகிறோம்.


அந்த வகையில் இன்று வேதியியல் பாடத்துக்கான மாதிரி வினாத்தாளை இந்தக் கட்டுரையில் காணலாம்.


பன்னிரெண்டாம் வகுப்பு


வேதியியல்


நேரம் : 3.00 மணி                                                                                   மதிப்பெண்:70


பகுதி அ


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதக:-                                                                  15*1=15



  1. கார்பனைக் கொண்டு உலோகமாக ஒடுக்க இயலாத உலோக ஆக்சைடு


அ) Pbo                        ஆ) Al2O3                            இ)ZnO                         ஈ)F2O



  1. வைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம்


அ) நான்முகி                 ஆ) அறுங்கோணம்             இ)எண்முகி                   ஈ)இவை எதுவுமில்லை



  1. ஹேலஜன் இடைச் சேர்மத்தில் எந்த தனிமம் மைய அணுவாக செயல்படுவதில்லை


அ) F                            ஆ) cl இ)Br                         ஈ)I



  1. Mn2+ அயனியின் காந்த திருப்புதிறன் மதிப்பு


அ)5.92 Bm                   ஆ)2.80 Bm                  இ)8.95 Bm                               ஈ)3.90 Bm                   



  1. [Co(NH3)4 Br2]Cl என்ற அணைச் சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம்


அ)வடிவ மற்றும் அயணியாதல்  மாற்றியம்        ஆ)வடிவ மற்றும் ஒளிசுழற்சி  மாற்றியம்                           


இ)ஒளி சுழற்சி மாற்றியம் மற்றும் அயணியாதல்  மாற்றியம்   ஈ) வடிவ மாற்றியம் மட்டும்



  1. bcc அலகு கூட்டில் காணப்படும் வெற்றிடத்தின் சதவீதம்


அ) 48%                      ஆ)23%                          இ)32%   ஈ)26%



  1. கூற்று: ஒரு வினை முதல் வகை வினையாக இருந்தால் , வினைபடு பொருளின் செறிவு இரு மடங்காகும் போது , வினைவேகமும் இரு மடங்காகும்


காரணம்: வினைவேக மாறிலியும் இரு மடங்காகும்,


அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி , மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.


ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி , மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல.


இ) கூற்று சாரி காரணம் இரண்டும் தவறு.


ஈ) கூற்று சாரி மற்றும் இரண்டும் தவறு



  1. H2Po4 3- இன் இணைகாரம்


அ) Po4 3-                                       ஆ)P2O5                       இ) H2PO4                         ஈ) HPo4 2-



  1. நேர்மின் முனையில் நடைபெறும் வினை


அ) ஆக்சிஜன் ஏற்றம்                                        ஆ) ஆக்சிஜன் ஒடுக்கம்                                                                        


இ) நடுநிலையாக்கல் வினை                             ஈ) இவற்றில் எதுவுமில்லை



  1. ஒரு கூழ்மக்கரைசல் வழியே ஒளிக்கற்றையை செலுத்தும் போது காணப்படும் நிகழ்வு


அ)திரிதல்         ஆ) டிண்டால் விளைவு    இ) மின்முனைகவர்ச்சி  ஈ) பிரெளனியன் இயக்கம்



  1. கார்பாலிக் அமிலம் என்பது


அ) பீனால்      ஆ) பிக்ரிக் அமிலம்     இ) பென்சாயிக் அமிலம்     ஈ) பீனைல் அசிடிக் அமிலம்



  1. பின்வருவனற்றுள் எந்த ஒன்று டால்ன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குகிறது


அ)பார்மிக் அமிலம்                                           ஆ) பென்சோ பீனோன்


இ) ஆசிட்டிக் அமிலம்       ஈ)இவற்றில்எதுவுமில்லை



  1. C6H5N2Cl----à A, A என்பது


அ) பென்சீன்                ஆ) பீனால்                   இ) நைட்ரோ பென்சீன்       ஈ) அனிலீன்



  1. புரதத்தின் இரண்டாம் நிலை அமைப்பானது எதைக் குறிக்கிறது?


அ) பாலிபெப்டைடு முதுகெலுபின் நிலையான வச அமைப்பு                     


ஆ) நீர் வெறுக்கும் இடையீடுகள்


இ)  α - அமினோ அமிலங்களின் வரிசை


ஈ) α- சுருள் முதுகெலும்பு



  1. பின் வருவனவற்றுள் எந்த ஒன்று மக்கும் பலபடி?


அ)HDPE                      ஆ) PVC                      இ)நைலான்-6               ஈ) PHBV


பகுதி –ஆ


எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளி (வினா எண் 24 கட்டாய வினா)                       6*2=12       



  1. சுய ஒடுக்கம் என்றால் என்ன?

  2. மந்த இணை விளைவு என்றால் என்ன?

  3. [Ti(H2O)6] 3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமுற்றது விளக்குக

  4. வினைவேகத்தை பாதிக்கும் காரணிகளை குறிப்பிடுக.

  5. வினைவேக மாற்றியின் சிறப்பியல்புகள் யாவை?

  6. டின்டால் விளைவு என்றால் என்ன?

  7. கான்னிசரோ வினை எழுதுக

  8. புரைதடுப்பான்கள் கிருமி நாசினி வேறுபடுத்துக

  9. குளோரோ பிக்ரின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதன் பயன் யாது?


பகுதி –இ


எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளி (வினா எண் 33 கட்டாய வினா)                       6*3=18



  1. சிக்கோன்களின் பயன்கள் யாவை?

  2. லாந்தனைடு ,ஆக்டினைடுகள் வேறுபடுத்துக.

  3. இணைப்பு மாற்றியம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  4. ஷாட்கி குறைபாடு வரையறு.

  5. முதல்வகை வினையின் வினைவேக மாறிலி அதன் அரைவாழ் காலத்தினை கணக்கிடுக

  6. ஆஸ்வால்ட் நீர்த்தல் விதி வரையறு

  7. பெர்கின் வினை எழுதுக

  8. அமில நீக்கி என்றால் என்ன?

  9. அயோடோ பார்ம் வினை எழுதுக


பகுதி – ஈ


அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                  5*5=25



  1. அ) புலத்தூய்மையாக்கல் முறையினை விவரி (அல்லது) ஆ) சங்கிலி தொடராக்கம் என்றால் என்ன? இ) எத்தில் போரேட் ஆப்பு கூறு

  2. அ) இணைதிறன் பிணைப்புக் கொள்கையை விவரி (அல்லது) ஆ) FCC அலகு கூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கையை கணக்கிடுக. இ) போனி முதல் வகை வினையை எடுத்துகாட்டுன் விளக்குக.

  3. அ) இயற்புறப்பு கவர்தல் வேதி புறப்பரப்பு கவர்தல் வேறுபடுத்துக. ஆ) வினைவேக மாற்ற நச்சு குறிப்பு வரைக (அல்லது) இ) கோல்ராஷ் விதி கூறு ஈ) நெர்ன்ஸ்ட் சமன்பாட்டை வருவி.

  4. அ) விக்டர் மேயர் முறையில் ஒரிணைய, ஈரிணைய , மூவிணைய ஆல்கஹாலை வேறுபடுத்துக (அல்லது) ஆ) ஆல்டால் குறுக்கத்தை வினைவழிமுறையுடன் விளக்குக  இ) கேப்ரியல் தாலிமைடு தொகுப்பு வினை எழுதுக.

  5. அ)குளுக்கோஸின் அமைப்பை விளக்குக (அல்லது) ஆ)கோல்ப் வினை எழுதுக. இ) டெரிலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது.


மாதிரி வினாத்தாள் உருவாக்கம்






- ஆசிரியர் ராஜா (A3 குழு), 


முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்


மேலப்புலம் அரசு மேல்நிலைப் பள்ளி, 


ராணிப்பேட்டை.


இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.