அரசுப் பொதுத் தேர்வு - 2023
10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் மதிப்பெண்கள்:100
நேரம் : 3.00 மணி
I.சரியான விடையை தேர்வு செய்க: 14 x 1 = 14
1. பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?
(அ) ரூஸ்வெல்ட் (ஆ) சேம்பர்லின் (இ) உட்ரோ வில்சன் (ஈ) பால்டுவின்
2. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
(அ) 1827 (ஆ) 1829 (இ) 1826 (ஈ) 1927
3. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
(அ) 1858 ஆம் ஆண்டு சட்டம் (ஆ) இந்திய கவுன்சில் சட்டம், 1909 (இ) இந்திய அரசுச் சட்டம் 1919
(ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935
4.கூற்று: காங்கிரஸ் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டது.
காரணம்: காங்கிரஸ் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ள காந்தி-இர்வின் ஒப்பந்தம்
வழிவகை செய்தது.
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை,
(ஆ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறானது.
(இ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது. (ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும்
காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
5.பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ______.
(அ) பாபர் (ஆ) தராய் (இ) பாங்கர் (ஈ) காதர்
6. _______ மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.
(அ) வண்டல் (ஆ) கரிசல் (இ) செம்மண் (ஈ) உவர் மண்
7. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்
(அ) சிமெண்ட் (ஆ) ஆபரணங்கள் (இ) தேயிலை (ஈ) பெட்ரோலியம்
8. கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது?
(அ) பாலக்காடு (ஆ) செங்கோட்டை (இ) போர்காட் (ஈ) அச்சன்கோவில்
9.ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெற முடியும்?
(அ) வம்சாவளி (ஆ) பதிவு (இ) இயல்புரிமை (ஈ) மேற்கண்ட அனைத்தும்
10. கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல
(அ) சட்டமன்றம் (ஆ) நிர்வாகம் (இ) நீதித்துறை (ஈ) தூதரகம்
11. பொருந்தாத ஒன்றினைக் கண்டுபிடி
(அ) சமூக நலம் (ஆ) சுகாதாரம் (இ) ராஜதந்திரம் (ஈ) உள்நாட்டு விவகாரங்கள்
12. இந்திய பொருளாதாரம் என்பது
(அ) வளர்ந்து வரும் பொருளாதாரம் (ஆ) தோன்றும் பொருளாதாரம் (இ) இணை பொருளாதாரம்
(ஈ) அனைத்தும் சரி
13. _______ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
(அ) நீலப் புரட்சி (ஆ) வெள்ளைப் புரட்சி (இ) பசுமைப் புரட்சி (ஈ) சாம்பல் புரட்சி
14. _______ என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்.
(அ) வேளாண்மை (ஆ) தொழில் (இ) இரயில்வே (ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
II. ஏதேனும் 10 வினாக்களுக்கு விடையளி. கட்டாய வினா - 28 10 x 2 = 20
15. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக?
16. ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக்
காட்டுக?
17. ஜாலியன்வாலா பாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.
18. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக?
19. இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக?
20. இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக?
21. பன்னாட்டு வணிகம் - வரையறு?
22. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக?
23. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக?
24. இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
25. சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக?
26. நாட்டு வருமானம் - வரையறு.
27. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் யாவை?
28.ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் பற்றி குறிப்பு வரைக.
III. ஏதேனும் 10 வினாக்களுக்கு விடையளி. கட்டாய வினா - 42 10 x 5 = 50
29. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. பாளைக்காரர் முறை தமிழகத்தில் _________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
2. காந்தியடிகளின் அரசியல் குரு ________ ஆவார்.
3. பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் ______.
4. ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை _______ இடம் கொடுக்கிறார்.
5. _______ ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால்
நிறைவேற்றப்பட்டது.
30. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரங்களை விவாதி?
31. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க.
32. கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை
வரைக?
33. வேறுபடுத்துக
1. வண்டல் மண் மற்றும் கரிசல் மண்
2. உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்.
காரணம் கூறுக: கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.
34. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.
35. தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்?
36. இந்திய மண்வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி?
37. அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக?
38. ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி?
39. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி.
40. புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய குறிக்கோள்கள் யாவை?
41. காலக்கோடு வரைக. 1910 - 1940 வரை ஏதேனும் 5 நிகழ்வுகள் எழுதுக.
42. உலக வரைபடத்தில் குறிக்கவும்:
(1) ஜெர்மனி (2) துருக்கி (3) அட்லாண்டிக் பெருங்கடல் (4) ஆஸ்திரியா - ஹங்கேரி (5) இத்தாலி
IV. விடையளி:
43. (அ) 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்களை குறித்து விரிவாக ஆராயவும்? (அல்லது)
காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்.
44. (அ) இந்திய வரைபடத்தில் குறிக்கவும்:
(1) காட்வின் ஆஸ்டின் (2) சோட்டா நாகபுரி பீடபூமி (3) பாலை மண் (4) சேஷாசலம் உயிர்கோளப் பெட்டகம் (5)அதிக மழைப் பெறும் பகுதி (6) மும்பை ஹை (7) கிழக்குத் தொடர்ச்சி மலைகள் (8) காம்பே வளைகுடா
(அல்லது)
(ஆ) இந்திய வரைபடத்தில் குறிக்கவும். (1) எவரெஸ்ட் (2) தக்காண பீடபூமி (3) கரிசல் மண் (4) மின்னியல் தலைநகரம் (5) சணல் விளையும் பகுதி (6) சோழ மண்டல கடற்கரை (7) ஆரவல்லி மலைத் தொடர்
(8) இலட்சத்தீவுகள்
மாதிரி வினாத்தாள் உருவாக்கம்
- ஆசிரியர் கு.அருணாசலம் ப.ஆ (A3 குழு),
அரசினர் உயர்நிலைப் பள்ளி, மேல்படூர்
திருவண்ணாமலை மாவட்டம்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.