தமிழ்நாடு முழுவதும் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் சிறப்பாகவே அமைந்துள்ளது.

கடந்தாண்டை விட அதிக தேர்ச்சி:

மாநிலத்தின் தலைநகரான சென்னையைப் பொறுத்தவரையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் நன்றாக அமைந்துள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்தாண்டு 79 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். இந்த வருடம் அதை விட மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வருடம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 86.10 சதவீதமாக பதிவாகியுள்ளது.

முதலிடம் யாருக்கு?

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு அதிக மதிப்பெண்ணை தேஜஸ்வினி என்ற மாணவி பிடித்துள்ளார். இவர் சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மகளிர் மாணவிகள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்.  இவர் 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

மாணவர்களா? மாணவிகளா?

சென்னையைப் பொறுத்தவரை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 83.93 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில், மாணவிகள் 88.44 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

தேர்ச்சி எப்படி?

சென்னை மாநகராட்சிக்கு கீழ் செயல்பட்ட பள்ளிகளில் 14 பள்ளிகள் 100க்கு 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 12 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 500க்கு 350க்கு மேல் சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்த 1963 மாணவர்கள் எடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் 80 பள்ளிகளில் பள்ளிகளில் 65 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி அடைந்துள்ளன.

புரசைவாக்கத்தில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி

காமராஜபுரத்தில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி

கொடுங்கையூரில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி 

கண்ணம்மாபேட்டையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி

பாடிகுப்பத்தில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி

ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி

பெரம்பூர் குக்ஸ் சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி

கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி

மயிலாப்பூர் கேபி சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி

சேத்பட்டில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி

ரங்கராஜபுரத்தில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி

திருவல்லிக்கேணியில் உள்ள விபி கோயில் சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி

சூளைமேட்டில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி 

இந்த 14 பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.