தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் அர்ப்பணிப்பு மிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கிய பொதுத் தேர்வுக்கான 10, 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வங்கியை ABP Nadu சார்பில் தினந்தோறும் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று கணிதப் பாடத்துக்கான மாதிரி வினாத்தாளை இந்தக் கட்டுரையில் காணலாம். 


பத்தாம் வகுப்பு கணிதம்


கால அளவு: 3.00 மணி நேரம்                                     மொத்த மதிப்பெண்கள் :100


பகுதி –I


குறிப்பு: எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும்                               1*14=14



  • LMN ல்   L=600 , m=50 0மேலும்      LMN ∼    PQR   எனில்  B ன் மதிப்பு.


அ)40 0                 ஆ)70         0                 இ)30 0                  ஈ)1100



  • {1,2}, {1,2,3,4}, {5,6} மற்றும் ={5,6,7,8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?


அ)(AxC) ⊂(BxD)       ஆ)(BxD) ⊂ (AxC)      இ)(AxB)⊂(AxD)  ஈ)(DxA) ⊂ (BxA)   



  • ஒரு நேரிய பல்லுறுப்புக் கோவையின் வரைபடம் ஒரு


அ) நேர்கோடு         ஆ)வட்டம்                இ) பரவளையம்                        ஈ) அதிபரவளையம்



  • F:A-->B ஆனது இருபுறச்சார்பு மற்றும் n(B)=7 எனில்n(A)ஆனது


அ)7                    ஆ)49                           இ)1                    ஈ)14



  • 1729 ஐ பாகக் காரணிப்படுத்தும்போது, அந்த பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்         அ)1           ஆ)2           இ)3           ஈ)4

  • x2-2x-24 மற்றும் x2-kx-6 ன் மீ.பெ.வ (x-6) எனில் , k-ன் மதிப்பு


அ)3                    ஆ)5                    இ)6                    ஈ)8



  • 3x-y=4,x+y=8 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி


அ)(5,3)               ஆ)(2,4)               இ)(3,5)               ஈ)(4,4)



  • Acot + bcosec  =p மற்றும்bcot  +acoese  =q எனில் p2-q2ன் மதிப்பு


அ)a2-b2               ஆ)b2-a2              இ)a2+b2              ஈ)b-c



  • (12,3)(4,a) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு 1/8 எனில் ‘a’ எ மதிப்பு


அ) 1                   ஆ) 4                   இ)-5          ஈ) 2



  • படத்தில் AC = அ)25மீ          ஆ) 25√3மீ             C


                      இ) 25/√3மீ     ஈ)25√2மீ                 A                B        



  • செமீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளம் அதே ஆரமுள்ள ஒரு கூம்பாக மாற்றப்படுகிறது எனில் கூம்பின் உயரம்.


அ)3x செ.மீ         ஆ) xசெ.மீ           இ) 4x செ.மீ                  ஈ)2x செ.மீ



  • சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை , ஒரு கூம்பு, மற்றும் ஒரு கோளத்தின் கனஅளவுகளின் விகிதம்


அ)1:2:3              ஆ) 2:1:3             இ) 1:3:2                      ஈ) 3:1:2



  • ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக்கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில் திட்டவிலக்கமானது.


அ) 3.5                ஆ) 3                   இ) 4.5                         ஈ)2.5



  • கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?


அ) O≤P(A)≤1      ஆ) P(A)>1          இ)P(∅ )=0                   ஈ)P(A)+P(A)=1


பகுதி –I I


குறிப்பு: எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும்.


(வினா எண் 28-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்)                                                              10*2=20



  • A={1,2,3}மற்றும் B={x / x என்பது 10ஐ விடச் சிறிய பகா எண்} எனில் AxB மற்றும் BxA ஆகியவற்றைக் காண்க.

  • படத்தில் காட்டப்பட்டுள்ள அம்புக்குறி படமானது P                Q


P மற்றும் Q கணங்களுக்கான உறவைக்குறிக்கின்றது.




இந்த உறவை (1) கணகட்டமைப்பு முறை


(2) பட்டியல்முறைகளில் எழுதுக.



  • எளிய வடிவில் சுருக்குக. 4 x2 y         6 x z3


                                                  2 z2           20 y4



  • 1+2+3+……….+n = 666 எனில் n ன் மதிப்பு காண்க.

  • வர்க்கமூலம் காண்க 121 (a+b)8 (x+4)8 (b-c)8


                                           81   (b-c)(a-b)12 (b-c)4



  • ABCன் பக்கங்கள் AB மற்றும்AC-ன் மீதுள்ள புள்ளிகள் முறையே D மற்றும் E ஆனது DE||BC என்றவாறு அமைத்துள்ளது.AD / DB = 3 / 4 மற்றும்AC=15 செ.மீ AEன் மதிப்பு காண்க.

  • (sin-  cos) மற்றும் (-sin,cos) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டின் சாய்வைக் காண்க.

  • 5x+23y+14=0 மற்றும் 23x-5y+9=0 ஆகிய நேர்க்கோடுகள் இணையானவை அல்லது செங்குத்தானவையா எனச் சோதிக்கவும்.

  • Tan2- sin2 = tan2 sin2 என்பது நிரூபி.

  • 10√3 உயரமுள்ள ஒரு கோபுரத்தின் அடியிலிருந்து 30மீ தொலைவில் தரையில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து கோபுரத்தின் உச்சியின் ஏற்றக் கோணத்தைக் காண்க.

  • 25,67,48,53,18,39,44 தரவுப் புள்ளிகளுக்கு வீச்சு மற்றும் வீச்சுகெழு காண்க.

  • ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகிறது இரண்டு அடுத்தடுத்த பூக்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.

  • A=    5       2   மற்றும்  B=     3       -2   என்ற அணிகள் ஒன்றுக்கொன்று


7       3                         -7      5    பெருக்கல் நேர்மாறு அணி என நிறுவுக.


பகுதி – III


குறிப்பு: எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும்.


(வினா எண் 28-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்)                                                              10*2=20



  • x= {-5,1,3,4}மற்றும் y={a,b,c}எனில் x லிருந்து y-க்கு பின்வரும் உறவுகளில் எவை சார்பாகும்?


(1)R1= {(-5,a),(1,a),(3,b)}      (2) R2={(-5,b),(1,b),(3,a),(4,c)}   


(3)R3={(-5,a),(1,a),(3,b),(4,c),(1,b)}        



  • f(x)=x2,g(x)=2x மற்றும் h(x)=x+4 எனில்(fog)oh=fo(goh) எனக் காட்டுக.

  • 602க்கும் 902க்கும் இடையே 4ஆல் வகுபடாத இயல் எண்களின் கூடுதல் காண்க.

  • கூடுதல் காண்க 93+103+…….+21

  • தேல்ஸ் தேற்றத்தை எழுதி நிருபி.

  • A= 1       2       1                B=   2     -1


2       -1      1                       -1      4              எனில்


                                            0      2


(AB)T     = B T  A T   என்பதை சரிபார்க்க        



  • (-2,3) மற்றும் (8,5) என்ற புள்ளிகள் வழிச்செல்லும் கோடானது , y=ax+2 என்ற நேர்க்கோட்டிற்குச் செங்குத்தானது எனில் ‘அ’-ன் மதிப்பு காண்க.

  • (8,6),(5,11),(-5,12) மற்றும் (-4,3) ஆகிய புள்ளிகளை முனைகளாக கொண்ட நாற்கரத்தின் பரப்பைக்காண்க.

  • இரு கப்பல் கலங்கரை விளக்கத்தின் இரு பக்கங்களிலும் கடலில் பயணம் செய்கின்றன. இரு கப்பல்களிலிருந்து கலங்கரை விளக்கத்தின் உச்சியின் ஏற்றக் கோணங்கள் முறையே 300 மற்றும் 450 ஆகும் கலங்கரை விளக்கத்தின் உயரம் 200மீ எனில் இரு கப்பல்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க(√3 =1.732).

  • ஓர் உருளையின் மீது ஓர் அரைக்கோளம் இணைந்தவாறு உள்ள ஒரு பொம்மையின் மொத்த உயரம் 25 செ.மீ ஆகும். அதன் விட்டம் 12செமீ எனில் பொம்மையின் மொத்தப்புறப்பரப்பைக் காண்க.

  • ஒரு குறிப்பிட்ட பருவத்தில் 6 நாள்களில் பெய்யும் மழையின் அளவானது 17.8 செ.மீ , 19.2 செ.மீ ,16.3செ.மீ,12.5செ.மீ ,12.8செ.மீ,11.4செ.மீ எனில் இந்த தரவிற்கு திட்டவிலக்கம் காண்க.

  • 8000 மக்கள் தொகை கொண்ட ஒரு நகரத்தில் 1300 போர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 3000 பேர் பெண்கள் மேலும் 50வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 30% உள்ளனர் எனவும் தெரியவருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபர் பெண்ணாக (அல்லது) 50வயதிற்கு மேற்பட்டவராக இருபதற்கான நிகழ்தவு காண்க

  • ஒரு முக்கோணத்தின் நடுக்கோடுகள் ஒரு புள்ளி வழியகாகச் செல்லும் எனக் காட்டுக.


பகுதி – IV


குறிப்பு: எவையானும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும்.


(வினா எண் 28-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்)                                                   2*8=16


 



  • அ) 4.5செ.மி ஆரமுள்ள வட்டம் வரைந்து வட்ட்த்தின் மீது ஏதேனும் ஒரு புள்ளிக்கு மாற்று வட்டத்துண்டு தேற்றத்தினைப் பயன்படுத்தி தொடுகோடு வரைக.


(அல்லது)


ஆ) PQ=4.5  செ.மீ  LR=60o மற்றும் உச்சி Rலிருந்து வரையப்பட்ட நடுக்கோட்டின் நீளம் RG=5.8செ.மீ என          PQR வரைக. R-லிருந்து   PQ-க்கு வரையப்பட்ட குத்துக்கோட்டின் நீளம் காண்க.



  • (அ)Y= ½x என்ற நேரிய சமன்பாட்டின் / சால்வின் வரைபடம் வரைக. விகித சமமாறிலியை அடையாளம் கண்டு, அதனை வரைப்படத்துடன் சரிபார்க்க மேலும்

  • X=9 எனில்  y-ஐக் காண்க.   

  • Y=7.5 எனில்  x-ஐக் காண்க


(அல்லது)


(ஆ) y=4x2+4x+3 என்ற வரைபடம் வரைந்து அதனைப் பயன்படுத்தி         x2+x+1=0 என்ற சமன்பாட்டின் தீர்வைக் காண்க.


மாதிரி வினாத்தாள் உருவாக்கம்


ஆசிரியர் ச. பாமா (A3 குழு), 


பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி,


முதலிபாளையம், திருப்பூர்.




தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.