10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அரசுத் தேர்வுகள் இயக்ககம் பல்வேறு விதிமுறைகள், கடமைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது. இதில் தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக, அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல தனியார் பள்ளி முதல்வர்களும் தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக பணியாற்றக் கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.


அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:


* தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின்‌ தலைமையாசிரியாகளை முதன்மைக்‌ கண்காணிப்பாளராக நியமனம்‌ செய்தல்‌ கூடாது. 8 கிலோ மீட்டர்‌ தூரத்திற்கு மிகாமல்‌ உள்ள பிற அரசுப்பள்ளி / அரசு உதவி பெறும்‌ பள்ளி தலைமையாசிரியர்களை / அரசுப்‌ பள்ளிகளின்‌ மூத்த ஆசிரியர்களை தேர்வு மைய முதன்மைக்‌ கண்காணிப்பாளராக நியமனம்‌ செய்ய வேண்டும்‌. எக்காரணம்‌ கொண்டும்‌ தனியார்‌ பள்ளிகளின்‌ முதல்வர்களையோ/ துணை முதல்வர்களையோ / ஆசிரிய்களையோ எந்த தேர்வு மையத்திற்கும்‌ முதன்மைக்‌ கண்காணிப்பாளர்களாக நியமனம்‌ செய்தல்‌ கூடாது.


* தனியார்‌ பள்ளி தேர்வு மையங்களுக்கு, அரசு / அரசு உதவி பெறும்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்‌களையோ அல்லது அரசுப்‌ பள்ளிகளின்‌ மூத்த ஆசிரியாகளையோ தேர்வு மைய முதன்மைக்‌ கண்காணிப்பாளராக நியமனம்‌ செய்து கொள்ள வேண்டும்‌.


* அரசுப்‌ பள்ளியைச்‌ சார்ந்த ஆசிரியர்களே துறை அலுவலராக நியமனம்‌ செய்யப்பட வேண்டும்‌. தேவைப்படும்‌ இடங்களில்‌ மட்டும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளி ஆசிரியர்களைத்‌ துறை அலுவலராக நியமனம்‌ செய்து கொள்ளலாம்‌.


* ஒரு தேர்வு மையத்திற்கு நியமிக்கப்படும்‌ முதன்மைக்‌ கண்காணிப்பாளரும்‌, துறை அலுவலரும்‌ வெவ்வேறு பள்ளிகளைச்‌ சேர்ந்தவர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. ஒரே பள்ளியைச்‌ சேர்ந்தவர்களாக இருத்தல்‌ கூடாது. கடந்த ஆண்டு தேர்வுப்‌ பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளி நடப்பு ஆண்டும் அப்பணியாளருக்கே ஒதுக்கீடு செய்யப்படக்‌ கூடாது.


* ஒரு தேர்வு மையத்தில்‌ தோவர்களின்‌ எண்ணிக்கை 500க்கு மேல்‌ இருப்பின்‌ ஒவ்வொரு 500 தேர்வர்களுக்கும்‌ ஒரு கூடுதல்‌ முதன்மைக்‌ கண்காணிப்பாளர்‌ மற்றும்‌ ஒரு கூடுதல்‌ துறை அலுவலர்‌ நியமனம்‌ செய்யப்பட வேண்டும்‌. தேர்வு மையத்தில்‌ 500 தேர்வர்களுக்கும்‌ குறைவான எண்ணிக்கையில்‌ தேர்வர்கள்‌ தேர்வெழுதும்‌ நாட்களில்‌தேர்வு மையத்தில்‌ கூடுதல்‌ முதன்மைக்‌ கண்காணிப்பாளர்‌ மற்றும்‌ கூடுதல்‌ துறை அலுவலரை பயன்படுத்தக்‌ கூடாது.


* அறைக்‌ கண்காணிப்பாளர்களாக நியமனம்‌ செய்யப்படும்‌ ஆசிரியர்கள்‌ தேர்வு நடைபெறும்‌ அன்றைய பாடத்தினைப்‌ போதிக்கும்‌ ஆசிரியர்களாக இல்லாததை உறுதி செய்துகொள்ள வேண்டும்‌. நியமனம்‌ செய்யப்பட்ட ஆசிரியர்களை, ஆய்வு அலுவலரால்‌ குறிப்பிடப்படும்‌ நாளன்று, தலைமையாசிரியாகள்‌ கட்டாயம்‌ பணிவிடுவிப்பு செய்யவேண்டும்‌. ஆய்வு அலுவலரின்‌ அனுமதியின்றி மாற்றமோ, பணிக்கு வராமல்‌ இருப்பதோ கண்டிப்பாக ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது. வாய்மொழி ஆணைகள்‌ கண்டிப்பாக கூடாது.


* அறைக்‌ கண்காணிப்பாளர்கள்‌ குலுக்கல்‌ முறையில்‌ தேர்ந்தெடுக்கப்படுதல்‌ வேண்டும்‌.


* பெரிய மாவட்டங்களைப்‌ பொறுத்தவரை சிறிய மண்டலங்களாகப்‌ பிரித்து அதற்குள்ளாக குலுக்கல்‌ முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்‌. தேர்வு மையத்தில்‌ 20-க்கும்‌ குறைவான எண்ணிக்கையில்‌ தேர்வர்கள்‌ தேர்வெழுதும்‌ நாட்களில்‌ அறைக் கண்காணிப்பாளரையும்‌ நிலையான படையினரையும்‌ நியமனம்‌ செய்தல்‌ கூடாது. அன்றைய தினம்‌ துறை அலுவலரே அறைக்‌ கண்காணிப்பளர்‌ பணியினை மேற்கொள்ள வேண்டும்‌.


இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


கையேட்டை முழுமையாகக் காண: