அரசு தேர்வுகள் இயக்கம் தனித்தேர்வர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  இந்த கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, ப்ளஸ்1 மற்றும் ப்ளஸ்2 (மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு) ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுவிற்கு தகுதியான தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.  


மேலும், ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (ப்ளஸ்1) பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள்  அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதுவதற்கும்,  முதலாம் ஆண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் :


மே 2022 ஆண்டு  பத்தாம் வகுப்பு , ப்ளஸ்1 , ப்ளஸ்2 வகுப்புகளின் பொதுத் தேர்வுகளுக்கு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் 09.03.2022 (புதன் கிழமை) முதல் 16.03.2022 (புதன்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து  காலை 10.00 மணி முதல் மாலை 5.00  மணி வரை மாவட்ட அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.


இந்தத் தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 18.03.2022


(வெள்ளிக்கிழமை) முதல் 21.03.2022 (திங்கட்கிழமை) வரை ஞாயிற்றுக்கிழமை தவிர


காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணமாக கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு வரும் மாணவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கவனிக்க வேண்டியவை:


எட்டாம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயின்று தேர்ச்சி அல்லது இடையில் நின்ற மாணவர்கள், தேர்வுத்துறையால் நடத்தப்படும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் முதல் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் நேரடித் தனித் தேர்வர்கள் புதிய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடம் கருத்தியல் / செய்முறைத் தேர்வு எழுத வேண்டும்.


2012-ஆம் ஆண்டிற்கு முன்பு அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற மாணவர்கள் அறிவியல் பாடத்தில் கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வெழுத வேண்டும். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தினை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 09.03.2022 முதல் 15.03.2022 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள் மற்றும் மையம் போன்ற முழுவிவரங்களை அறிய அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் விவரங்களுக்கு https://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.


அறிவிப்பு குறித்த விவரங்கள் மற்றும் அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவுரைகள் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்தால் தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம்.


https://tnegadge.s3.amazonaws.com/notification/SSLC/1646723366.pdf


https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1646720469.pdf


https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1646720412.pdf


https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1646720390.pdf