திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழாவில் 917 மாணவ, மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 2000 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்த மாணவ மாணவிகள் இங்கு .கல்வி பயின்று வருகின்றனர் மத்திய பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேந்தர் ஜி.பத்மநாபன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக டெல்லி சர்வதேச மைய மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப இயக்குனர் பேராசிரியர் ரமேஷ் வி.சோண்டி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக உரையாற்றினார். இதில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் சிறப்பு விருந்தினர்கள் மாணவ மாணவிகள் என அனைவரும் பாரம்பரிய முறைப்படி துண்டு அணிந்து இருந்தனர்.
குறிப்பாக இந்த துண்டில் மத்திய பல்கலைக்கழகம் என்பது ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சடிக்கப்பட்டு இருந்தது. தமிழ் இதில் புறக்கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டமளிப்பு விழாவில் 523 மாணவிகள் 394 மாணவர்கள் என மொத்தம் 917 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் 39 மாணவ மாணவிகள் பல்கலைக்கழக அளவிலான இடங்களை பிடித்து பதக்கங்களை பெற்றனர்.இந்த பட்டமளிப்பு விழாவில் திருவாரூர் தமிழ்நாடு முக்கிய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பதிவாளர் சுலோச்சனா சேகர் உள்ளிட்ட மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பட்டம் பெறும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் துண்டு அணிந்துள்ளனர் இதில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் பெயர் அச்சிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச மைய மரபனு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப இயக்குனர் பேராசிரியர் ரமேஷ் வி சோண்டி பேசுகையில், "தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட தரமான கல்வியாலும், உங்கள் இளமை ஆற்றலாலும், அதீத ஆர்வத்தாலும், இந்தியாவை அறிவுப் பொருளாதாரமாகத் தள்ளும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு நீங்கள் பெரும் பங்களிப்பைச் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அறிவுப் பொருளாதாரத்தின் முதல் முன்நிபந்தனை, நன்கு படித்த குடிமக்கள், அங்குதான் நீங்கள் பெற்ற கல்வி 21" நூற்றாண்டுக்கான இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்குப் பெரிதும் உதவும்.
அதிக பதவிகளை அடைவதற்கும், இந்த பதவிகளை மிகவும் பொறுப்புடனும் நம்பிக்கையுடனும் கையாள்வதற்கு தேவையான திறன்களையும் மதிப்புகளையும் கல்வி உங்களுக்கு வழங்குகிறது. பொது நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் நம் நாட்டின் சாதாரண குடிமக்கள் செலுத்தும் வரிகளால் ஆதரிக்கப்படுகின்றன, அவர்களில் பலருக்கு கல்வி வெளிச்சம் இன்னும் எட்டவில்லை. அது பொது அல்லது தனிப்பட்டதாக இருக்கலாம்.
நிதியுதவியுடன், அனைத்து மாணவர்களும், இந்த தேசத்தின் குடிமக்கள் என்ற முறையில், சமூகத்திற்கு திரும்ப கொடுக்க வேண்டிய கடமை உள்ளது. ஜான் எஃப். கென்னடி கூறியது போல், "உங்கள் நாடு உங்களுக்காக என்ன செய்ய முடியும் என்று கேட்காதீர்கள் - உங்கள் நாட்டிற்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்று கேளுங்கள்". ஆம், நீங்கள் எந்தத் துறையில் அல்லது பதவியில் இருந்தாலும், அதை நம் சமூகத்திற்கும், நாட்டிற்கும், நமது உலகத்திற்கும் எந்த வடிவத்திலும் திருப்பித் தருவதாக உறுதியளிப்போம், இதனால் உலகம் அதில் பிறந்ததற்கு சிறந்த இடமாக இருக்கும்"என பேசினார்.