தமிழக அரசின் கலைபண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதி நேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையம் தொடங்கவுள்ளது. அதற்கான மாணவர் சேர்க்கையும் துவங்கப்படவுள்ளது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்  தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டமன்ற 2023-2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் - தமிழ்நாட்டின் 25 இடங்களில் பகுதி நேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் ஏற்படுத்தி கலைப் பயிற்சிகள் வழங்கிட நிதி அமைச்சர் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. தொடர்ந்து நாட்டுப்புறகலைகளைப் பாதுகாக்கவும் இப்பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களில் செழித்தோங்கவும் நாட்டுப்புறகலைகளில் பொதுமக்களிடையே ஆர்வத்தினை ஏற்படுத்த வேண்டும். உயரிய நோக்கத்திலும் அழிந்து வரும் கலைகளில் இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளித்து அக்கலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தினை செயல்படுத்தும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நோக்கில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவும் நிதியமைச்சகத்தின் அறிவிப்பின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான வகுப்பு 


கலை பண்பாட்டுத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதி நேரநாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையம் வருகின்ற 12.07.2024 முதல் தொடங்கப்படவுள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறகலைகளான 1.தெருக்கூத்து 2.பெரியமேளம் 3.பம்பை 4.கிராமியபாட்டு ஆகிய நான்கு கலைப் பிரிவுகளில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.


கல்வி தகுதி 


இப்பயிற்சியில் 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் சேரலாம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற இயலாதவர்கள் பயிற்சியின் முடிவில் பல்கலைக் கழக தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். சேர்க்கை கட்டணமாக ஆண்டிற்கு ரூ.500 மட்டும் செலுத்தப்பட வேண்டும். இப்பயிற்சியில் சேர்ந்து பயில விண்ணப்பம் பெற தலைமை ஆசிரியர் மாவட்ட அரசு இசைப்பள்ளி கிரிவலப் பாதை செங்கம் ரோடு  (நேரு யுவகேந்திரா அலுவலகம் பின்புறம்) சமுத்திரம் கிராமம் திருவண்ணாமலை 606 603. எனும் முகவரியில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.


பயிற்சி வகுப்பு குறித்து விவரம்


மேலும் விவரம் வேண்டுவோர் இசைப்பள்ளி அலுவலகத்தை 04175-235545 9442507657 ஒருங்கிணைப்பாளர் 8667399314 என்கிற எண்களில் தொடர்பு கொண்டு சேரலாம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாரம்பரியம்மிக்க நாட்டுப்புறகலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.