வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில் உள்ள அரசு திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் 17-வது ஆண்டு பட்டமளிப்பு விழா 19-06-2023 அன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான R.N .ரவி, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர், வி.கே சிங், தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி,பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில், 417 முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள் உள்பட 564-மாணவ மாணவியர்களுக்கு நோடியாக ஆளுநர் R.N. ரவி பட்டங்களை வழங்கினார். இந்த ஆண்டு மொத்தமாக 1,13,275 மாணவ, மாணவியர்கள் பட்டங்களை பெற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்,
பட்டங்களை பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். கல்லூரி படிப்பை முடித்துள்ள நீங்கள் உலகில் பல சவால்களை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். நம் நாட்டின் வளர்ச்சியின் பாதையில் மாணவர்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் இலக்கினை அடைய கடுமையான உழைப்பை பயன்படுத்த வேண்டும். தொழில் முனைவர்களாக மாறினால் தங்களின் வாழ்க்கை பிரகாசிக்கும்.தொழில் முனைவோர்களாக இளைஞர்களுக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் உதவிகளை அளித்து வருகிறது. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசு பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களை நம்பியுள்ளது. இந்தியா மற்ற நாடுகளை விட சுய தொழில் துவங்குவதில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 61 வகையான தொழில்களுக்கு,132 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. கொரோனா காலத்திற்குப் பின்பு இந்தியாவின் பொருளாதாரம் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். படித்த இளைஞர்கள் அனைவரும் அரசு வேலை நம்பி இருக்க வேண்டாம். ஒட்டு மொத்தமாக நான்கு சதவீதம் அளவிற்கு அரசு துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளது. மீதமுள்ள 96 சதவீதம் தனியார் வேலை வாய்ப்புகள் உள்ளது. 2015-ஆம் ஆண்டில் இந்தியாவில் 428 சுயதொழில் நிறுவனங்களில் இருந்தன. அதன் பிறகு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால், தற்பொழுது 80 ஆயிரம் சுய தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது. எனவே இளைஞர்கள் சுயதொழில் துவங்க முன்வர வேண்டும் இதற்கு மத்திய அரசு தேவையான உதவிகளைஅளித்து வருகிறது என்று பேசினார்.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.