திருவண்ணாமலை மாவட்டத்தில் 167 பள்ளிகள் உள்ளனர். அதில் மிதிவண்டி பெறும் மாணவர்கள் 9437 மாணவிகள் 10828 என மொத்தம் 20265 ஆகும். திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் மிதிவண்டி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 15 அதில் மிதிவண்டி பெறும் மாணவர்கள் 1154 மாணவிகள் 1645 என மொத்தம் 2799 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1 கோடியே 34 இலட்சத்து 84 ஆயிரத்து 800 மதிப்பில் இன்று மிதிவண்டி வழங்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக திருவண்ணாமலை நகராட்சி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.


 




மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசுகையில்; 


திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாவட்டத்தில் முதன்மை பள்ளியாக உள்ளது. இந்தப் பள்ளியின் தேர்ச்சி விகிதம் 98.61% ஆகவும், இந்த பள்ளி மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் அனைவரும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். மாணவர்கள் நினைத்தால் அனைத்தும் சாத்தியமாகும் அதற்கு நமது எண்ணங்கள், குறிக்கோள்களில் கவனமாக இருக்க வேண்டும், ஆசிரியர்கள் அனைவரும் கல்வியை மட்டும் கற்றுக் கொடுக்காமல் அவர்களுக்கு சமூகம் சார்ந்த பல்வேறு தகவல்களை அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மாணவர்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் மற்றும் பல்வேறு குடும்ப சூழ்நிலை இருந்தும் பள்ளிக்கு வருகிறார்கள் அனைத்து பிரச்சனைகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் சரியாக கல்வி கற்று நல்ல எண்ணங்களுடன் வெளிவரும் போது சமூகத்தில் சிறப்பான இடத்தை அடைய முடியும். இந்தப் பள்ளியில் படித்து சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களை அழைத்து வந்து மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளும் இந்த மாதத்துக்குள் இலவச மிதிவண்டி கொடுத்து முடிக்கப்படும். பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான இருக்கைகள் இந்த பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் வழங்கி உள்ளார்கள் அதற்கு அவருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.


 




 


ஆகஸ்ட் 25 முதல் 1554 காலை உணவு திட்டம் 


இந்தப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூபாய் 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டுக்குள் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு செல்லும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது இது அரசு பள்ளி மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆகஸ்ட் 25 முதல் 1554 பள்ளிகளில் காலை உணவு திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட உள்ளார் மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவும் நோக்கில் சென்ற வாரம் கல்வி கடன் மேளா நடத்தப்பட்டது. மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம் என்ன படித்தால் எந்த வேலைக்கு செல்லலாம் என்று ஆசிரியர்கள் பள்ளி மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி அவர்களை வழிநடத்த வேண்டும். மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி சமூகத்தில் உயர்ந்த பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்று பேசினார்.


இந்நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன். மாவட்ட கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திக் வேல்மாறன், தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி