ஐஐடி, என்ஐடி போன்ற உயிர் கல்வி நிறுவனங்களிலும் மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் மற்றும் காலியாக உள்ள பணியிடங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என்ற கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.


உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இருக்கிறதா என்று மதிமுக நிறுவனரும் பொதுச் செயலாளருமான வைகோ, மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.


இதுகுறித்து வைகோ எழுப்பிய கேள்விகள்:


’’1. நாடு முழுமையும் ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில், இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதா?


2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்து அரசு ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டதா? அதுகுறித்த புள்ளி விவரங்கள் அரசிடம் இருக்கின்றதா? வேலை வாய்ப்புகளில் எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளன?  


3. ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்காகத் தேர்வு செய்கின்றபொழுது, இட ஒதுக்கீடு குறித்து விளம்பரங்கள் தரப்படுகின்றதா? அதுகுறித்து, அரசு அறிவுறுத்தி இருக்கின்றதா?  


4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள் தேவை.


5. உயர் கல்வி நிறுவனங்களில் காலியாகக் கிடக்கின்ற ஒதுக்கீட்டு இடங்களை எப்போது நிரப்புவீர்கள்?’’


இவ்வாறு வைகோ கேள்வி எழுப்பியிருந்தார்.


இதற்கு மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


’’மத்திய அரசின் பொறுப்பில் உள்ள பல்கலைக்கழகங்கள், இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (IGNOU), இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐடிகள்), இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் (ஐஐஎம்), என்ஐடிகளில், தற்போது பணியில் இருக்கின்ற பட்டியல், பழங்குடி இன மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் விவரம்.




மேற்கண்ட நிறுவனங்களில் உள்ள காலிப் பணி இடங்கள் குறித்த அட்டவணை




இவை தவிர, கல்வி அமைச்சத்தின் பொறுப்பில் உள்ள மேற்கண்ட நிறுவனங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் காலியாக உள்ள பணி இடங்களை, 2021 செப்டம்பர் 5ஆம் நாள் தொடங்கி, 2022 செப்டம்பர் 4 க்குள் நிறைவு பெறுகின்ற அடுத்த ஓராண்டுக்கு உள்ளே, தகுதியானவர்களைத் தேர்ந்து எடுப்பதற்கான பணிமுறை (Mission Mode) வகுத்துச் செயல்பட்டு வருகின்றோம்’’.


இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய கல்வி செய்திகளைஅறிய Abpnadu-இல் கல்வி செய்திகள் (Education news) என்ற பக்கத்தில் தொடரவும்.