தஞ்சை தமிழ்ப் பல்கலை.,யில் பரபரப்பு... பூட்டப்பட்ட பதிவாளர் அறை... குவிந்த போலீஸ்

தமிழ் பல்கலைக்கழகத்தில் இந்த சர்ச்சை குறித்து என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழுந்த நிலையில் தமிழ் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Continues below advertisement

தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர் (பொ),  பதிவாளர் (பொ) இருந்துஒருவரை ஒருவர் நீக்குவதாக மாற்றி மாற்றி உத்தரவிட்ட சர்ச்சையில் பெரும் ஏற்படுத்திய இன்று காலை புதிதாக பதிவாளர் பொறுப்பிற்கு பேராசிரியர் நியமனம் செய்யப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். 

Continues below advertisement

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு துணைவேந்தர்,  பதிவாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக மாற்றி மாற்றி ஆணை பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ரெண்டு நாட்களாக சர்ச்சை ஏற்பட்டு பரபரப்பு சூழ்நிலை நிலவி வருகிறது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு சர்ச்சைகளும், மோதல்களும் அவ்வப்போது எழுந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2017-2018 ம் ஆண்டுகளில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களில் 40 பேரை, உரிய கல்வித் தகுதி இல்லாமல் முறைகேடாக, அப்போது துணைவேந்தராக இருந்த பாஸ்கரன், பணி நியமனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. 

இது தொடர்பான பொதுநல வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு துணை வேந்தராக வி.திருவள்ளுவன் என்பவர்  நியமிக்கப்பட்டார்.  இவர், முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாக சொல்லப்படும் 40 பேரையும் தகுதி கான் பருவம் அடிப்படையில் நிரந்தர பணியில் அமர்த்த சிண்டிகேட்டில் ஒப்புதல் பெற்றதாக கூறப்பட்டது, இது தொடர்பாக தமிழக ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.


ஆனால், திருவள்ளுவன் முறையான பதிலை அளிக்கவில்லை என்பதால், கடந்த அக்டோபர் 20ம் தேதி, அவரை சஸ்பெண்ட் செய்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தவும் ஆளுநர் தரப்பில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, தமிழக ஆளுநரால், தமிழ்ப் பல்கலைக்கழக தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் க.சங்கரை, துணை வேந்தர் (பொ) நியமிக்கப்பட்டார். 


இந்நிலையில், க.சங்கர் பல்கலைக் கழக பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அசாதாரண சூழல் ஏற்படும் நிலையை உருவாக்கி வருவதால், பல்கலைக் கழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறுப்பு துணை வேந்தர் சங்கருக்கு பதிலாக, பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பெ.பாரதஜோதியை துணை வேந்தர் பணிகளை கவனிக்கவும், ஆட்சிக்குழுவில் துணை வேந்தர் பொறுப்பு குழு  நியமிக்கப்படும் வரை செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி, பொறுப்பு பதிவாளரான சி.தியாகராஜன் உத்தரவு ஒன்றை வெளியிட்டார்.

இதற்கிடையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருந்ததால், தற்போது பொறுப்பு பதிவாளராக பணியாற்றும் தியாகராஜன், விசாரணை வரம்பிக்குள் இருப்பதாலும், நிர்வாகக் காரணங்களுக்காகவும், பதிவாளர் தியாகராஜனை பொறுப்பில் இருந்து நீக்கவும், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றிவரும் தெ.வெற்றிச்செல்வனை, மறுஆணை பிறப்பிக்கும் வரை அல்லது நிரந்தரப் பதிவாளர் பணிநியமனம் செய்யும் வரை பணியாற்ற ஆணையிடுவதாக, பொறுப்பு துணை வேந்தரான சங்கர் ஒரு ஆணையை வெளியிட்டார். இப்படியாக பொறுப்பு துணை வேந்தராக உள்ள சங்கரும், பதிவாளராக உள்ள தியாகராஜனும் மாற்றி, மாற்றி ஆணை பிறப்பித்துள்ளது தமிழ்ப்பல்கலைக் கழக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதுகுறித்து பல்கலைக்கழக பணியாளர்கள் கூறியதாவது: கடந்த டிச.24ம் தேதி, தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது, ஆட்சிக்குழுக் கூட்டம் நடத்துவதற்கான கோப்பினை நகர்த்துமாறு, தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளர், பல்கலைகழக பதிவாளரான தியாகராஜனிடம் அறிவுறுத்தியுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், துணைவேந்தர் பொறுப்பில் உள்ள சங்கர், அரசு செயலாளருடன் ஆலோசனை பெறாமல், பதிவாளர் பொறுப்பில் உள்ள தியாகராஜனை நீக்கினார். இச்சம்பவம் தமிழ் வளர்ச்சித் துறைய செயலாளர் கவனத்துக்கு சென்ற நிலையில், பல்கலைக் கழகத்தில், பழைய நிலையே தொடர வேண்டும், இரண்டு ஆணைகளையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது என்றனர். கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் இன்று திங்கட்கிழமை தமிழ் பல்கலைக்கழகத்தில் இந்த சர்ச்சை குறித்து என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழுந்த நிலையில் தமிழ் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அசாதாரணமான சூழ்நிலை நிலவியது.

பல்கலைக்கழகத்தில் பதிவாளரின் அறை வெளிபுறம் பூட்டப்பட்டு இருந்தது. அப்போது பேராசிரியர் தியாகராஜன் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தார். இதற்கிடையில் பதிவாளர் பொறுப்பு நியமனம் செய்யப்பட்ட வெற்றிச்செல்வன் பதிவாளர் அறை கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola