ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே ( செப்டம்பர் 8ஆம் தேதி) கடைசித் தேதி என டிஆர்பி தெரிவித்துள்ளது.
டெட் (TET- Teachers Eligibility Test) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 என நடத்தப்படுகிறது. முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடைபெறும் என முந்தைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்வு எப்போது?
தற்போது நிர்வாக காரணங்களால், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நவம்பர் 15-ம் தேதி (15.11.2025) அன்று தாள் I மற்றும், நவம்பர் 16-ம் தேதி(16.11.2025) அன்று தாள் II-ம் நடைபெறும் என திருத்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதல் தாள் எழுதி தேர்ச்சி பெறும் தேர்வர்கள், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் ஆகப் பணியாற்றலாம். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுவோர் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றலாம்.
வயது வரம்பு
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை.
விண்ணப்பக் கட்டணம்
பொதுத் தேர்வர்களுக்கு 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. எனினும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு 300 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இரண்டு தேர்வுக்கும் தனித்தனியாகத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம்.
மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள்
மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு, இரு தாள்களுக்கும் தனித்தனியாகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். எஸ்சி, பிசி, எம்பிசி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 82 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது, எஸ்டி மாணவர்கள், 60 மதிப்பெண்கள் எடுத்தால் போதும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் https://trb1.ucanapply.com/apply_now என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில், https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6InVGbm1xMDJEWUhsWUxrVFdzVE5MRVE9PSIsInZhbHVlIjoiK3ZUd2VXUWVMU1pScjBPZXplc04rUT09IiwibWFjIjoiODhlZTIwYTc0Mzc3NTk1ODg0NDFlNzFlZmFiZWNiYzlkNGNlOTFhMzI5ODUxNmIyNzg0MGEzMjBlMWI0MDNkYyIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பை க்ளிக் செய்து முதல் தாளுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேபோல https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6InZ2M3F4WGo1UXpyWkhxU3NZMkJtVUE9PSIsInZhbHVlIjoiT1lRb281WWNMMTlGWDIxSkNNcHZvZz09IiwibWFjIjoiMDMyMDEwMDQ1YjdiMmMyZTY4NmExM2Y0MjNlMDk3NmJjNjBjZmMxZjAzZWQ5MDZiYmNkN2FlYzI2MTZhOWI0YSIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பின்மூலம் இரண்டாம் தாளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
எனினும் இவை இரண்டிலும் இ - மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
தொலைபேசி எண்: 1800 425 6753 (10:00 am – 05:45 pm)
முழு விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/admin/pdf/4796496415notific.pdf