இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர ஜூன் 12ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்‌ பல்கலைக்கழகம்‌ தெரிவித்துள்ளது.


எங்கெங்கே எந்தெந்த கல்லூரிகள்?


சென்னை கால்நடை மருத்துவக்‌ கல்லூரி, 


நாமக்கல்‌ கால்நடை மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,
திருநெல்வேலி கால்நடை மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,


ஒரத்தநாடு, தஞ்சாவூர்‌ - கால்நடை மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,
 சேலம்‌ - கால்நடை மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,


தேனி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்‌ கல்லாரி மற்றும்‌ அராய்ச்சி நிலையங்களில் ஐந்தரை ஆண்டுகள் கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌  கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.


அதேபோல பிவிஎஸ்ஸி & ஏஎச்‌ (BVSc & AH) படிப்புகள் மொத்தம் ஐந்தரை ஆண்டுகளுக்குப் படிக்கப்பட்டு வருகின்றன. நான்கரை ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு உள்ளுறைப் பயிற்சி அவசியம் ஆகும். 


B.Tech. - Food Technology


உணவுத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பு (பி.டெக். பயோடெக்னாலஜி) படிப்பு, சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கு 4 ஆண்டுகள் அவகாசம் ஆகும். 


BTech – Poultry Technology


கோழியின தொழில்நுட்பப் பட்டப் படிப்பு, ஓசுர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கற்பிக்கப்படுகின்றது. இந்தப் படிப்பும் மொத்தம் 4 ஆண்டுகளுக்குக் கற்பிக்கப்படுகின்றது.  


BTech – Dairy Technology 


பால்வளத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பு (பி.டெக்.டய்ரி டெக்னாலஜி) படிப்பு, சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கு 4 ஆண்டுகள் அவகாசம் ஆகும். எனினும் முந்தைய படிப்புகளைக் காட்டிலும் குறைவான இடங்களே ஒதுக்கப்படுகின்றன.  


இதற்கிடையே இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர ஜூன் 12ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்‌ பல்கலைக்கழகம்‌ தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்‌ பல்கலைக்கழக சேர்க்கைக்‌ குழு (இளநிலை பட்டப்படிப்பு) தலைவர்‌ இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:


''தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்‌ பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH மற்றும் BTech) மாணவர்‌ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்‌ பல்கலைக்கழக இணையதளம்‌ மூலம்‌ வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் 12.06.2023 காலை 10.00 மணி முதல்‌ 30.06.2023 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். 


அயல்நாடு வாழ்‌ இந்தியர்‌ (NRIs) / அயல்நாடு வாழ்‌ இந்தியரின்‌ குழந்தைகள்‌ (Wards of NRIs) / அயல்நாடு வாழ்‌ இந்தியரின்‌ நிதி ஆதரவு பெற்றோர்‌ (NRI Sponsored) மற்றும்‌ அயல்நாட்டினர் (Foreign National) ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள்‌ மற்றும்‌ இதர விவரங்களை https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில்‌ அறிந்து கொள்ளலாம்‌''.


இவ்வாறு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்‌ பல்கலைக்கழக சேர்க்கைக்‌ குழு (இளநிலை பட்டப்படிப்பு) தலைவர்‌ தெரிவித்துள்ளார்.