இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு நாளையுடன் (30.06.2023) முடிவடைகிறது.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி ஒரத்தநாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி, வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. ஏ.ஹெச்.) 660 இடங்கள் இருக்கின்றன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 597 இடங்கள் மாநில அரசு வசம் உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜூன் 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 


மாணவர் சேர்க்கை


இந்தப் படிப்புகளுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


B.Tech. - Food Technology, BTech – Poultry Technology, BTech – Dairy Technology ஆகிய படிப்புகள் நான்கு ஆண்டு கால படிப்பாகும். 


B.Tech. - Food Technology - சென்னை உணவு மற்றும் பால்வளத்  தொழில்நுட்பக் கல்லூரி


B.Tech – Poultry Technology- ஓசுர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி


B.Tech – Dairy Technology - சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி.


விண்ணப்பிப்பது எப்படி?


பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் நாளைக்குள் (30.06.2023) விண்ணப்பிகலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2023