தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகள்
கொரோனாவுக்குப் பிறகு நடப்பாண்டு தான் வழக்கம் போல கல்வி நிலையங்கள் செயல்பட்டு கல்வியாண்டின் இறுதியை நெருங்கி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 10,11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைய உள்ளது.
இதேபோல் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கிய 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடக்கும் இந்த தேர்வுகளை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
ஹால் டிக்கெட்
முன்னதாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த வாரம் வெளியானது. இதனைத் தொடர்ந்து இன்று பள்ளி மாணவ- மாணவியர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகிறது. இதனை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக ஹால் டிக்கெட்டை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி பதிவிறக்கம் செய்யலாம்?
- https://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.
- தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவிட்டு Submit ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- இப்போது திரையில் தெரியும் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு ஆப்ஷனை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்லலாம்.
10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
- ஏப்ரல் 6 - தமிழ் (மொழித்தாள்)
- ஏப்ரல் 10 - ஆங்கிலம்
- ஏப்ரல் 13 - கணிதம்
- ஏப்ரல் 15 - விருப்ப மொழித்தாள்
- ஏப்ரல் 17 - அறிவியல்
- ஏப்ரல் 20 - சமூக அறிவியல்
முன்னதாக 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 5 ஆம் தேதியும்,10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 17ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே19 ஆம் தேதியும் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களின் மாதிரி வினாத் தாள் மற்றும் 12ஆம் வகுப்பு மாதிரி வினாத் தாள்களைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.