தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் பணியாற்றுவதற்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கு காலியாக உள்ள ஓட்டுநர் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி  மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அனுப்பி வைக்குமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீன்பிடித்துறைமுகத் திட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலிருந்து தான் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கு காலியாக உள்ள இரண்டு இலகுரக வாகன ஓட்டுநர் பணிகள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. எனவே தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே வரவேற்கப்படுகின்றன. 





மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற தகுதிகள் கொண்டிருக்க வேண்டும் எனவும், இப்பக்கத்தில் https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Advertisement_-_Filling_up_of_the_post_of_Driver.pdf  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தினை டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும். மேலும் இவர்களது விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக The Executive Engineer, Fishing Harbour Project Division, Integrated Animal Husbandry and Fisheries and Fishermen Welfare Department Office Complex, Nandanam, Chennai- 600 035 என்ற முகவரிக்கு வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


 ஓட்டுநர் உரிமம் இன்றைய தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின் படி பணி நியமனம் மேற்கொள்ளப்படும் எனவும், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும், விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.  நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இதோடு விண்ணப்பதார் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும் போன்ற வழிமுறைகள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதோடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைத்தால் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனில் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும், இதர வகுப்பினர் எனில் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



எனவே அறிவிப்பில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பங்களை ஆர்வமும் உள்ள நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு ரூபாய் ரூ. 19,500 – 62,000/- சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.