சங்க இலக்கிய பாடல்களை ஓவியங்களாக வரையும் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்கள் பங்கேற்கலாம் என தமிழ் இணைய கல்விக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இதில் பங்கேற்பது எப்படி என்று பார்க்கலாம்.


இதுகுறித்துத் தமிழ் இணைய கல்விக் கழகம் தெரிவித்து உள்ளதாவது:


உ போட்டியில்‌ பங்கேற்க நுழைவுக்‌ கட்டணம்‌ கிடையாது.


உ9 முதல்‌ 12-ஆம்‌ வகுப்புகளில்‌ பயிலும்‌ பள்ளி மாணவர்கள்‌, கல்லூரி மாணவர்கள்‌ மற்றும்‌ ஆர்வமுள்ள ஓவியர்கள்‌ இப்போட்டியில்‌ பங்கேற்கலாம்‌.


https://www.tamilvu.org/ என்ற இணைய தளத்தில்‌ பதிவுப்‌ படிவத்தை முறையாகப்‌ பூர்த்தி செய்தல்‌ வேண்டும்‌.


உ சங்க இலக்கியப்‌ பாடல்கள்‌, அதற்கான விளக்கம்‌ மற்றும்‌ ஓவியத்திற்கான சில குறிப்புகள்‌ தமிழ்‌ இணையக்‌ கல்விக்கழகத்தின்‌ இணையதளத்தில்‌ வழங்கப்படும்‌.


உ ஒரு மின்னஞ்சல்‌ முகவரி மூலம்‌ ஒரு பாடலை மட்டுமே தேர்ந்தெடுக்க இயலும்‌.


உ போட்டியாளர்கள்‌ தாங்கள்‌ தேர்வு செய்யும்‌ பாடலின்‌ பொருளை மையமாகக்‌ கொண்டு தெளிவாக ஓவியம்‌ வரைந்து, மேலே குறிப்பிடப்பட்டு்ள்ள இணைய தளத்தில்‌ பதிவு செய்த 10 நாட்களுக்குள்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.


உ த.ஒ.கவின்‌ இணையதளத்தில்‌ போட்டிக்கான பதிவு இணைப்பு 27.11.2023 வரை செயல்பாட்டில்‌ இருக்கும்‌.


உ 27.11.2023 அன்று பதிவு செய்வோர்‌ 06.12.2023 அன்று மாலை 6.00 மணிக்குள்‌ ஓவியங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.


உ ஓவியத்தின்‌ அசலை 09.12.2023 க்குள்‌ விரைவு அஞ்சல்‌ அல்லது தூதஞ்சல்‌ மூலம்‌ அனுப்ப வேண்டும்‌.


உ சிறந்த ஒவியங்களுக்கு பள்ளி மாணவர்கள்‌, கல்லூரி மாணவர்கள்‌ மற்றும்‌ ஓவியர்கள்‌ என்ற பிரிவுகளில்‌ தலா மூன்று பரிசுகள்‌ மற்றும்‌ சான்றிதழ்‌ வழங்கப்படும்‌.


முதல்‌ பரிசு - ரூ. 25,000


இரண்டாம்‌ பரிசு - ரூ. 15,000


மூன்றாம்‌ பரிசு - ரூ. 9,000


உ தேர்ந்தெடுக்கப்படும்‌ இதர ஓவியங்களுக்கு ஊக்கத்‌ தொகையாக ரூ.2,000 (ரூபாய்‌ இரண்டாயிரம்‌ மட்டும்‌) மற்றும்‌ மின்சான்றிதழ்‌ வழங்கப்படும்‌.


உ தேர்ந்தெடுக்கப்படும்‌ அனைத்து ஓவியங்களையும்‌, தமிழ்‌ இணையக்‌ கல்விக்கழகம்‌ சங்க இலக்கிய நாட்காட்டி உருவாக்கத்திற்குப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளும்‌.


உ ஓவியங்களைத்‌ திருப்பி அனுப்ப இயலாது.


உ தமிழ்‌ இணையக்‌ கல்விக்கழக நடுவர்‌ குழுவின்‌ முடிவு இறுதியானது.


உ மேலும்‌ விவரங்களுக்குத்‌ தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: இயக்குநர்‌, தமிழ்‌ இணையக்‌ கல்விக்கடிகம்‌, கோட்டூர்‌, சென்னை - 25. தொலைபேசி எண்‌ : 044- 2220 9400, 491 86678 22210.  மின்னஞ்சல்- tpktva@gmail.com


ஓவியம்‌ வரைவதற்கான விதிமுறைகள்‌


உ தேர்வு செய்யப்பட்ட பாடலின்‌ பொருளை அடிப்படையாகக்‌ கொண்டு மட்டுமே ஓவியங்களைத்‌ தெளிவாக வரைய வேண்டும்‌. வேறு எதேனும்‌ பாடலுக்கு ஓவியங்கள்‌ வரைந்தால்‌ அவ்வோவியங்கள்‌ எற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.


உ 13’’ * 13’’ அளவில்‌ வண்ண ஓவியங்களாக மட்டுமே வரைந்து அனுப்ப வேண்டும்‌. (Water Colour / Acrylic / Poster / Oil Painting)


உ ஓவியங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்யும்போது (1OMB-க்கு மிகாமல்‌) JPEG/JPG/PNG வடிவில்‌ கோப்பிற்கு "ஓவியர்‌ பெயர்‌_பாடல்‌ எண்‌" (எ.கா. XXXX_நற்றிணை10) எனப்‌ பெயரிட வேண்டும்‌.


உ ஓவியத்தை மடிக்காமலும்‌, சேதப்படுத்தாமலும்‌, சுய விவரக்‌ குறிப்பு, கணினியால்‌ வழங்கப்பட்ட குறியிட்டு எண்‌ மற்றும்‌ தேர்வு செய்த பாடலைத்‌தனித்‌ தாளிலும்‌ எழுதி, ஒரே உறையில்‌ வைத்து பாதுகாப்பான முறையில்‌ இயக்குநர்‌, தமிழ்‌ இணையக்‌ கல்விக்கழகம்‌, கோட்டூர்‌, சென்னை - 25. விரைவு அஞ்சலிலோ, தூதஞ்சலிலோ அல்லது நேரிலோ இயக்குநர்‌, தமிழ்‌ இணையக்‌


கல்விக்கழகம்‌, கோட்டூர்‌, சென்னை - 25. என்ற முகவரிக்கு உறையின்‌ மேல்‌ சங்க இலக்கிய - ஓவியப்போட்டி என்று குறிப்பிட்டு அனுப்பி வைக்கவேண்டும்‌. அஞ்சல்‌ வந்தடைய வேண்டிய கடைசி நாள்‌: 09.12.2023


இவ்வாறு தமிழ் இணையக் கழகம் தெரிவித்துள்ளது.