அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 1,500 பேருக்கு அவர்கள் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.1,500 வழங்க வகை செய்யும் தமிழ் மொழி இலக்கியத்‌ திறனறித்‌ தேர்வுக்கான இறுதி விடைக்குறியீட்டை அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. இதைப் பார்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.


இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் கூறும்போது, ’’15.10.2022 அன்று நடைபெற்று முடிந்த தமிழ்மொழி இலக்கிய திறனறித்‌ தேர்வு சம்பந்தமான தற்காலிக விடைக்குறியீடு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககத்தின்‌ www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில்‌ வெளியிடப்பபட்டுள்ளது.


மாணவர்கள்‌ மற்றும்‌ பெற்றோர்கள்‌ இந்த விடைக்குறியீட்டைத் தரவிறக்கம் செய்து காணலாம்’’ என அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது.


பின்னணி என்ன?






பள்ளி மாணவ, மாணவியர்களின்‌ அறிவியல்‌, கணிதம்‌, சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு அதிக அளவில்‌ தயாராகி, பங்கு பெறும் நிலையில், அதைப்‌ போன்று தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனை மாணவர்கள்‌ மேம்படுத்திக்‌ கொள்ளும்‌ வகையில்‌ தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனறிவுத்‌ தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. 2022- 2023ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ நடைபெறும் இத்தேர்வில்‌ 1,500 மாணவர்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்‌ கல்வித்‌ துறை வழியாக மாதம்‌ ரூ.1500/- வீதம்‌ இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்‌. இத்தேர்வில்‌ 50 சதவீத அளவுக்கு அரசுப்‌ பள்ளி மாணவர்களும்‌, மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பள்ளி மாணவர்கள்‌ உள்ளிட்ட பிற தனியார்‌ பள்ளி மாணவர்களும்‌ தெரிவு செய்யப்படுவார்கள்‌.





பாடத்திட்டம் என்ன?


தமிழ்நாடு அரசின்‌ 10-ஆம்‌ வகுப்புத் தர நிலையில்‌ உள்ள தமிழ்‌ பாடத் திட்டங்களின்‌ அடிப்படையில்‌ தேர்வு நடத்தப்படும்‌. இந்தத் தேர்வு கொள்குறி வகையில்‌ அமைந்திருக்க்கும். அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ இந்தத் தேர்வு நடத்தப்படும்‌.




 


2022- 2023ஆம்‌ கல்வியாண்டில்‌ தமிழகத்தில்‌ உள்ள அங்கீகாரம்‌ பெற்ற அனைத்து வகைப் பள்ளிகளில்‌ பயிலும்‌ (CBSE / ICSE உட்பட) பதினொன்றாம்‌ வகுப்பு மாணவர்கள் தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர்.


தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற நிலையில், 2.67 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இந்த நிலையில், தமிழ் மொழி இலக்கியத்‌ திறனறித்‌ தேர்வுக்கான தற்காலிக விடைக் குறியீட்டை அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் அக்டோபர் 19 அன்று வெளியிட்டது. 


அதில் ஏதேனும் மாற்றம்‌ இருப்பின்‌ அவற்றை 25.10.2022-க்குள் ttsexam2022@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கு உரிய ஆதாரத்துடன்‌ தெரிவிக்கலாம்‌ என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்சேபனைகள் பெறப்பட்ட பிறகு, இன்று இறுதி விடைக் குறியீடு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.