தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூந்1-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப்போகும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், திட்டமிட்டப்படி, பள்ளிகள் திறக்கப்படும் என்பதை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலால் 2022- 23ஆம் கல்வி ஆண்டு சற்று தாமதமாகத் தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டன. 10, 11, 12 ஆஅம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு, பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி தொடங்கி நடைபெற்றன. குறிப்பாக பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட்டன.
தொடக்கப் பள்ளித் தேர்வுகள்
இந்த நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தொடக்கப் பள்ளித் தேர்வுகள் (ஏப்ரல் 28ஆம் தேதியுடன் முடிந்தன. இந்த மாணவர்களுக்கு பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாகத் தேர்வுகள் நடைபெற்றன. ஏப்ரல் 11-ம் தேதி தேர்வு தொடங்கி, ஏப்ரல் 28ஆம் தேதி நிறைவு பெற்றது.
இதை அடுத்து மாணவர்களுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டது. ஒரு மாதம் விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 1ஆம் தேதி அன்று திறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தள்ளிப்போகும் என்று வெளியான தகவல்
தமிழ்நாட்டில் கோடை வெயில் சதமடித்து வருகிறது. மாணவர்களுக்கு ஏப்ரல் 29 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
6 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதியும் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஜுன் மாதம் 5ஆம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படும் தேதியை மாற்ற வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், பலரும் மாணவர்களின் நலன் கருதி அரசு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
கல்வியாண்டு விவரங்கள்
2023-24ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
மேலும் வாசிக்க..
UPSC 2022 Topper: யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம்: யார் இந்த இஷிதா கிஷோர்?