சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி நிறுவனர் எத்திராஜ் பிறந்தநாள் நிறுவனர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.

Continues below advertisement

மேடையில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன் கூறியதாவது:

''எத்திராஜ் கல்லூரியில் இடம் கிடைப்பது அரிது. 1996-ல் எனது துணைவியார் இந்த கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.. எந்த பதவி எங்களுக்கு கிடைத்தாலும் எத்திராஜ் அவர்களுக்கு மாலை அணிவிப்பது அரிது.

Continues below advertisement

எப்போது என்னை இந்த கல்லூரிக்கு அழைப்பார்கள் என இருந்தேன். நான் உயர்கல்வித்துறை அமைச்சராக ஆன பிறகு இந்த கல்லூரியில் பேச வாய்ப்பு கிடைத்தது. சாதாரண என்னை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் ஆக்கிய முதலமைச்சர் விஜய்க்கு நன்றி'' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசும்போது,

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

என்ற குறளைச் சொல்லும்போது, பாதியை மறந்துவிட்டார். மீண்டும் பேசியவர், 

உயர் கல்வித்துறை 2 முக்கிய முடிவுகள்

மாணவர்களுக்கு வெறும், கல்வி மட்டும் இருக்கக்கூடாது, கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு இருக்க வேண்டும் என்ற முடிவை முதல்வர் எடுத்துள்ளார்.

முதல்வர் போதை ஒழிப்பு திட்டம் கொண்டுவந்துள்ளார். பள்ளி, கல்லூரிகளில் இருந்து முழுமையாக போதை புழக்கத்தை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சைனா போன்ற மேலை நாடுகளில் போதை பழக்கம் அதிகமாக இருந்தது. அந்தகால கட்டத்தில் உலக நாடுகளுக்கு சீனா போன்ற நாடுகளில் இருந்துதான் அனைவரும் இறக்குமதி செய்வார்கள் கோனி டாங் என்ற ஒருவர்தான் அந்த கலாசாரத்தை ஒழித்தார். அதேபோல தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அதை செய்து காட்டி வருகிறார்.

1.5 லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன்

மாணவர்கள் கல்வி கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்திருக்கிறார். கடந்தாண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் நபர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு கல்வி கடன் கிடைக்க வேண்டுமென்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்.

கடந்த ஆண்டுகளில் நான்கு லட்சம் வரை மாணவர்களுக்கு நேரடியாக கடன் வழங்கப்பட்டது.. ஏழு லட்சம் வரை தாயோ தந்தையோ கையெழுத்து இட்டால் கடன் வழங்கப்படும். இனி 7 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கப்படும்’’ என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.  

நான் முதல்வன் திட்டத்தை பெயரை மாற்றியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ’’அது அந்த அரசாங்கத்தில் எடுத்த முடிவு. எங்கள் அரசாங்கம் வந்த பிறகு நாங்கள் நடைமுறைகளை மாற்றுவோம்’’ என்று தெரிவித்தார்.