தமிழக பட்ஜெட்டில் மாநிலத்தின் உயர் கல்வித்துறைக்கு தவெக அரசு என்னென்ன அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று காணலாம். 

Continues below advertisement

இதுகுறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’நீட் தேர்வில் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு ஆகியவை எதிர்காலத் உயர்கல்வி வாய்ப்பினை பெரிதும் தலைமுறையினரின் பாதிக்கின்றன. எனவே நீட் தேர்வு முறையினை உடனடியாக ரத்து செய்து முந்தைய முறையான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான சேர்க்கையை தொடர்ந்திட ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.

சிறப்பு நோக்கு நிறுவனம்

மாநிலம் முழுவதும் மாணவர் தங்கும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 10 கோடி ரூபாய் ஆரம்ப மூலதனத்துடன் தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம்' (TNSHIC) என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) ஒன்றை நமது அரசு அமைக்கும்.

Continues below advertisement

TN-SUDAR (மாணவர் குடியிருப்புகளின் மாநில அளவிலான மேம்பாடு வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்) என்ற முதன்மைத் திட்டத்தின் கீழ் முக்கியக் கல்வி மையங்களில் ஒரு இலட்சம் நவீன படுக்கை வசதிகளுடன் கூடிய 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள் கட்டப்படும். சுமார் 3.200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு-தனியார் கூட்டாண்மை (PPP DBFOT) மாதிரியின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் இதற்கு மாநில அரசின் 20 சதவீத கட்டுமான மானியம் (அடுத்த இரண்டு நிதியாண்டுகளில் 640 கோடி ரூபாய்) வழங்கப்படும்.

என்னென்ன வசதிகள்?

இத்திட்டம், பரவலாக உள்ள தங்குமிடங்களை ஒருங்கிணைந்த, உயர்தர வசதிகள் கொண்ட வளாகங்களாக மாற்றியமைக்கும். இவ்வளாகங்களில், முழுமையாகக் குளிரூட்டப்பட்ட டிஜிட்டல் கற்றல் மையங்கள், 24 மணி நேரப் பாதுகாப்பு, சுகாதாரமான சமையலறைகள் மற்றும் முழுமையான சமூக சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலான தானியங்கி ஒதுக்கீட்டு முறை ஆகியவை இடம்பெறும். வரும் ஆண்டுகளில், பல்வேறு சமூகங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த இளைஞர்களை TN-SUDAR திட்டம் ஒன்றிணைக்கும்.

மதுரையில் சிறப்பு தரத்தில் அரசு சட்டக் கல்லூரி

மதுரையில் சீர்மிகு சட்டப்பள்ளி தரத்தில் மேம்பட்ட சட்டக் கல்வி வழங்க, 300 மாணவர்களின் சேர்க்கையுடன் தொடங்கப்படும்.

எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்கு 8,393 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.