Kia Sorento Booking Start: கியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சொரொண்டே கார் மாடல், முதல் நாள் முதலே ஹைப்ரிட் மற்றும்டீசல் என இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியா சொரெண்டோ - செப்.4ம் தேதி அறிமுகம்..!
கியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சொரெண்டோ எஸ்யுவி செப்டம்பர் 4ம் தேதி இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலவிய இந்த ப்ரீமியம் எஸ்யுவி ஆனது விழாக்காலத்தை குறிவைத்து உள்ளூரில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ப்ராண்ட் சார்பாக நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப் நிலையங்களில் இந்த காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் அணுகி சுமார் 25 ஆயிரம் ரூபாய் என்ற டோக்கன் கட்டணத்தை செலுத்தி முன்பதிவினை மேற்கொள்ளலாம்.
கியா சொரெண்டோ - விலை விவரங்கள்
சொரெண்டோ மாடலானது கியா சார்பில் உள்நாட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் முதல் வலுவான ஹைப்ரிட் மாடலாக மட்டுமின்றி, முதல் நாள் முதலே டீசல் இன்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசல் எடிஷனின் தொடக்க விலையானது சுமார் 29.95 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த காரின் லைன் - அப்பில் டாப் வேரியண்ட்களாக ஹைப்ரிட் எடிஷன் நிலைநிறுத்தப்பட உள்ளதாம். 7 சீட்டர் இருக்கையான சொரெண்டோ உள்ளூரில் மூன்று வரிசை இருக்கை ப்ரீமியம் எஸ்யுவிகளான ஸ்கோடா கோடியாக், ஃபோக்ஸ்வாகன் டெய்ரொன், எம்ஜி க்ளோஸ்டர் மற்றும் டொயோட்டா ஃபார்ட்சுனரின் குறிப்பிட்ட சில வேரியண்ட்கள் ஆகியவற்றுடன் போட்டியிட உள்ளது.
கியா சொரெண்டோ - இன்ஜின் விவரங்கள்
இந்திய சந்தைக்கான தனது கார்களில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவோம் என கியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, சொரெண்டோவில் ஒரு டீசல் இன்ஜினையும் பயன்படுத்தி, மைலேஜை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இரண்டு பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை வழங்க உள்ளது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தென்கொரிய நிறுவனம் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேநேரம், வெளிநாடுகளில் இந்த நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் ஹைப்ரிட் எடிஷனானது 1.6-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் ஒரு மின்சார மோட்டாரை இணைத்து, ஒருங்கிணைந்து 238 hp மற்றும் 380 Nm ஆற்றலை உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது. 6 ஸ்பீட் ஆட்டொமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சொரெண்டோவின் ஃபேஸ்லிஃப்டட் எடிஷன் தான் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாம்.
கியா சொரெண்டோ - வெளிப்புற அம்சங்கள்
சர்வதேச சந்தையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சொரெண்டோவின் ஃபேஸ்லிஃப்டட் எடிஷன் தான் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாம். இதன் முன்புறத்தில் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்ட எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள், மெல்லிய எல்இடி டர்ன் இண்டிகேட்டர்ஸ், சதுர வடிவிலான எல்இடி ஃபாக் லேம்ப்களானது பம்பருடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று வழக்கமான அடையாளமான புலியின் மூக்கை போன்ற முன்புற க்ரில்லும் இடம்பெற்றுள்ளது. ரூஃப் ரெயில்கள், க்ளோஸ்-ப்ளாக் எக்ஸ்டீரியர் எலிமெண்ட்கள், 18 அல்லது 19 இன்ச் அலாய் வீல்கள், வாகன நிறத்திலான கதவு கைப்பிடிகள், U வடிவிலான எல்இடி டெயில் லேம்ப்கள் ஆகியவையும் மற்ற கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.
கியா சொரெண்டோ - உட்புற வசதிகள்
சொரெண்டோவின் உட்புறமானது சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள மாடலிலிருந்து மிகப்பெரிய தாக்கத்தை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்காக இரண்டு 12.3 இன்ச் டிஸ்பிளேக்கள், 4 ஸ்போக் ஸ்டியரிங் வீலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனவாம். மேலும், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேடட் வசதியுடன் கூடிய மின்சாரத்தால் சரிசெய்யக்கூடிய முன் இருக்கைகள் மற்றும் ப்ரீமியம் உட்புற வடிவமைப்பு ஆகியவை இடம்பெறலாம்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப்பிங் அசிஸ்ட், ஆட்டோனமஸ் எமர்ஜென்சி ப்ரேக்கிங் மற்றும் பல மோதல் தவிர்ப்பு செயல்பாடுகளைக் கொண்ட லெவல் 2 ADAS தொகுப்பு, 360-டிகிரி கேமரா அமைப்பு மற்றும் பல ஏர்பேக்குகள் ஆகியவை கிடைக்கும். சொரெண்டாவானது இந்தியாவில் கியாவின் முதன்மையான இன்ஜின் எடிஷன் எஸ்யுவியாக உருவெடுக்க உள்ளது. உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால், இந்த எஸ்யுவியின் விலை போட்டித்தன்மை வாய்ந்ததாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI