Tamil Nadu Budget 2024-25: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டமும் புதுமைப் பெண் திட்டமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு(Finance Minister Thangam Thennarasu), சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். அப்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்காக ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 


நடப்பாண்டில் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு என 44,042 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 


பள்ளிக் கல்வித்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.


* வரும்‌ ஆண்டில்‌, 1000 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பள்ளிக்‌கட்டமைப்பு வசதிகள்‌ மேற்கொள்ளப்படும்‌.


* இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


15 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள்


* வரும்‌ நிதியாண்டில்‌ 15,000 திறன்மிகு வகுப்பறைகள், 300 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ உருவாக்கப்படும்‌.


* வரும்‌ நிதியாண்டில்‌, அரசு பொறியியல்‌, கலை அறிவியல்‌ மற்றும்‌ பலவகை தொழில்நுட்பக்‌ கல்லூரிகளில்‌ கட்டடக்‌ கட்டமைப்புப்‌ பணிகள்‌ 200 கோடி ரூபாய்‌ செலவில் செயல்படுத்தப்படும்‌.


* ஒருங்கிணைந்த கற்றல்‌ மேலாண்மை அமைப்புடன்‌ பொறியியல்‌, பவைகை தொழில்நுட்பம்‌, கலை, அறிவியல்‌ கல்லூரிகள்‌ உட்பட 2236 அரசு கல்வி நிறுவனங்களுக்கு கணினி மற்றும்‌ இதர அறிவியல்‌ கருவிகள்‌ 173 கோடி ரூபாய்‌ செலவில்‌ வழங்கப்படும்‌.


* கோவை வாழ்‌ பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின்‌ அறிவுத்‌ தாகத்தை மேலும்‌ தூண்டும்‌ விதமாக ஒரு மாபெரும்‌ நூலகம்‌ மற்றும்‌ அறிவியல்‌ மையம்‌, கலைஞர்‌ பெயரில்‌ கோயம்புத்தூரில்‌ அமைக்கப்படும்‌.


* அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ 100 பொறியியல்‌ மற்றும்‌ கலை அறிவியல்‌ கல்லூரிகளில்‌, 200 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ புதிய திறன்‌ பயிற்சிக்‌ கட்டமைப்புகள்‌ (Skill Labs) உருவாக்கப்படும்‌.


மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கல்விக் கட்டணம்


* உயர் கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கல்விக் கட்டணைச் செலவை அரசே ஏற்கும்.


* 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்.


* ஒன்றியப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, இரயில்வே மற்றும்‌ வங்கிப்‌ பணித்‌ தேர்வுகளில்‌ தமிழ்நாட்டு இளைஞர்கள்‌ அதிகம்‌ வெற்றிபெற வேண்டும்‌ என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம்‌ மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில்‌ உண்டு, உறைவிட வசதியோடு கூடிய, தரமான ஆறுமாத காலப்‌ பயிற்சி வழங்கிட 6 கோடி ரூபாய்‌ கந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌.


இதையும் வாசிக்கலாம்: 


Tamil Nadu Budget 2024-2025 LIVE: மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வியை அரசே ஏற்கும் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு