12ஆம் வகுப்பு மேல்நிலை துணைத் தேர்வுகளுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தில் (தக்கல் முறையில்) விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

Continues below advertisement

95.2 % பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியாகின. இதில் 95.2 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், மீதமுள்ள மாணவர்களுக்கு மேல்நிலை துணைத் தேர்வுகள், ஜூன் / ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளன. இந்தத் துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Continues below advertisement

நடைபெற உள்ள ஜூன் / ஜூலை 2026 மேல்நிலை துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 18.05.2026 (திங்கட்கிழமை) முதல் 30.05.2026 (சனிக் கிழமை) வரையிலான நாட்களிலும், சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தக்கல் முறையில்) 01.06.2026 (திங்கட்கிழமை) மற்றும் 02.06.2026 ( செவ்வாய்க் கிழமை) வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டது.

கால அவகாசம் நீட்டிப்பு

தேர்வர்களின் நலன் கருதி இக்கால அவகாசம் 03.06.2026 (புதன்கிழமை) மற்றும் 04.06.2026 (வியாழக்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது’’ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.