ராஜ்கமல் தயாரிப்பில் ரஜினியின் தலைவர் 173 படத்திற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சுந்தர் சி , சிபி சக்கரவர்த்தியைத் தொடர்ந்து இந்த படம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிற்கு கைமாறியுள்ளது. இன்று அஸ்வத் மாரிமுத்துவின் பிறந்தநாளுக்கக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக சிறப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில் தலைவர் 173 படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குவது உறுதியாகியுள்ளது 

Continues below advertisement

ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 173 ஆவது படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. முன்னதாக சுந்தர் சி இந்த படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. பின் கூடுதல் அழுத்தம் காரணமாக சுந்தர் சி இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அடுத்தபடியாக டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தின் இயக்குநராக அறிவிக்கப்பட்டார். தற்போது சிபி சக்கரவர்த்தியின் கதையில் ரஜினிக்கு திருப்தி ஏற்படாததால் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.  இன்று அஸ்வத் மாரிமுத்துவின் பிறந்தநாளுக்கு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தில் இருந்து விலகியிருப்பதும் தலைவர் 173 படத்தின் புது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து என்பதும் உறுதியாகியுள்ளது. 

Continues below advertisement

தலைவர் 173 படத்தை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து 

ஓ மை கடவுளே , டிராகன் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்த அஸ்வத் மாரிமுத்து அடுத்தபடியாக ஏஜிஎஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்க்விருந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்திற்கு கதை சொல்லும் வாய்ப்பு அவருக்கு அமைந்து ரஜினிக்கும் இந்த கதை பிடித்துள்ளது. தற்போதைய நிலைப்படி கமல் இந்த கதைக்கு ஓக்கே சொல்லிவிட்டதாகவும் ரஜினி முழு கதையையும் கேட்டுவிட்டு ஓக்கே சொல்வது வரை படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிறுத்திவைக்கும் படி அஸ்வத் மாரிமுத்து ராஜ்கமல் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது 

முன்னதாக தலைவர் 173 படத்தை 2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வந்தது. ஆனால் தற்போது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.