தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 89 பள்ளிகளில் கல்வி பயிலும் 5042 மாணவர்களும் 5353  மாணவிகள், 52 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 447 மாணவ மாணவிகளில் பன்னிரண்டாம் 9974 பேர்  மாணவர்கள் மட்டும் பொதுத் தேர்வை எழுதுதினர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 38 மையங்களில் மாணவர்கள் தேர்வை எழுதினர்.




இதற்காக தனி தேர்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வை கண்காணிப்பதற்காக 4 சிறப்பு பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்களின் வினாத்தாள்கள் மயிலாடுதுறை செயின்ட்பால்ஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் சேகரிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. 




 


இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது நடைபெற்றுள்ள பொது தேர்வை எழுதி ஆர்வத்துடன் காத்திருந்த மாணவர்களுக்கு இன்று பள்ளி கல்வித்துறை சார்பில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் 4593 பேரும், மாணவிகள் 5381 பேரும் என மொத்தம் 9974 பேர் தேர்வு எழுதியதில், மாணவர்கள் 3978 பேரும், மாணவிகள் 5035 பேரும் என மொத்தம் 9013 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 90.36 ஆக பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டு சந்திக்கும் முதல் பொதுத் தேர்வு இதுவாகும்.


வழக்கம்போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 86.61 சதவீதமும், மாணவிகள் 93.57 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு உடனடியாக துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அவர்கள் நடப்பு கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியில் சேர வழிவகை செய்யப்படும் எனவும் கல்வி துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தேர்வு முடிவுகள் என்பது நிரந்தரமானது இல்லை என்றும், தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் மனம் தளராதே மீண்டும் முயற்சித்து தேர்வெழுதி பல உயர் இடத்திற்கு சென்றுள்ள முன்னுதாரணங்கள் பல இருக்கிறது என்றும், அது போன்ற முன்னுதாரணங்களை நினைவில் கொண்டு மாணவர்கள் தவறான எண்ணத்திற்கு செல்லாமல் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என கல்வியாளர்கள் பலரும் மாணவர்களுக்கு எனது அறிவுரை வழங்கி உள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண