கரூர் மாவட்டத்தில் மே மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 112 பள்ளிகளைச் சேர்ர்ந்த 4834 மாணவர்கள், 5411 மாணவிகள் ஆக மொத்தம் 10245 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.


 




20.06.2022 அன்று வெளியான மேல்நிலை வகுப்பு இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகளின் படி 4305 மாணவர்கள், 5158 மாணவிகள் ஆக மொத்தம் 9463 பேர் தேர்ச்சி பெற்று 92.37% விழுக்காடு தேர்ச்சி அளித்துள்ளனர். இது மார்ச் 2020 தேர்ச்சி விழுக்காட்டினை விட 2.14% குறைவு ஆகும்.


 




இவ்வாண்டு மாணவர்கள் 89.06% தேர்ச்சி விழுக்காடும் மாணவிகள் 95.32% தேர்ச்சி விழுக்காடும் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 86.54% தேர்ச்சி விழுக்காடும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 97.07% தேர்ச்சி விழுக்காடும், தனியார் பள்ளிகள் 98.75% தேர்ச்சி விழுக்காடும் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 27 மாற்றுத் திறனாளிகள் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர் இவர்களுள் 25 பேர் தேர்ச்சி பெற்று 92.59% விழுக்காடு பெற்றுள்ளனர். மாநில அளவில் கரூர் மாவட்டம் 27 வது இடம் பெற்றுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண