2025- 26ஆம் கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ஆம் தேதியில் தொடங்குகிறது. அதேபோல மார்ச் 26 அன்று பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவடைகின்றன. 

Continues below advertisement

தேர்வு முடிவுகள் எப்போது?

8.07 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ள நிலையில், இவர்கலுக்கான தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

இவர்களுக்கு எந்தெந்த நாட்களில் என்னென்ன தேர்வுகள்? பார்க்கலாம்.

வ.எண் தேதி பாடம்
1 மார்ச் 2 தமிழ், இதர மொழிப்பாடங்கள்
2 மார்ச் 5 ஆங்கிலம்
3 மார்ச் 9

வேதியியல்,

கணக்கியல்,

புவியியல்

4 மார்ச் 13 இயற்பியல்,

பொருளாதாரம்

வேலைவாய்ப்புத் திறன்

5 மார்ச் 17

கணிதம்

விலங்கியல்

வணிகம்

நுண்ணுயிரியல்

ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை

ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு

உணவு சேவை மேலாண்மை

வேளாண் அறிவியல்

நர்சிங் (பொது)

6 மார்ச் 23

உயிரியல்

தாவரவியல்

வரலாறு

வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்

அடிப்படை மின்னணுவியல் பொறியியல்

அடிப்படை சிவில் பொறியியல்

அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல்

அடிப்படை இயந்திர பொறியியல்

ஜவுளி தொழில்நுட்பம்

அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

7 மார்ச் 26

தொடர்பு ஆங்கிலம்

நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்

கணினி அறிவியல்

கணினி பயன்பாடுகள்

உயிரி வேதியியல்

மேம்பட்ட மொழி (தமிழ்)

வீட்டு அறிவியல்

அரசியல்

புள்ளிவிவரம்

நர்சிங் (தொழில்)

அடிப்படை மின் பொறியியல்