Mahindra XEV 9S EV: மஹிந்த்ரா நிறுவனத்தின் புதிய XEV 9S என்ற புதிய மின்சார காரின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

மஹிந்த்ராவின் XEV 9S மின்சார கார்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ரா நிறுவனம், தனது மூன்றாவது போர்ன் - எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆக XEV 9S மாடலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. INGLO ஸ்கேட்போர்ட் ப்ளாட்ஃபார்மை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள, இந்த காரானது வரும் நவம்பர் 25ம் தேதி சர்வதேச சந்தைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் XEV 9S கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வர மஹிந்த்ரா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

புதிய மின்சார காரானது மஹிந்த்ராவின் XEV 7e மாடலின் உற்பத்தி எடிஷன் ஆக கருதப்படுகிறது. இது XEV 9e மற்றும் XUV 700 கார் மாடல்களின் பல டிசைன் அம்சங்களை பகிர்ந்து கொண்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வரை சந்தையில் பரவி வரும், மஹிந்த்ராவின் புதிய 7 சீட்டர் மின்சார கார் தொடர்பான முக்கிய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

மஹிந்த்ரா XEV 9S: டிசைனில் XEV 9e & XUV700 கலவை

கசிந்துள்ள புகைப்படங்களின்படி, புதிய XEV 9S மாடலில் க்ளோஸ்ட்-ஆஃப் க்ரில் மற்றும் முக்கோண வடிவிலான முகப்பு விளக்கு ஆகியவை XEV 9e மாடலில் இருப்பதை போன்று வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், தலைகீழான L வடிவ பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள் அடங்கிய செட்-அப் மற்றும் முன்புற பம்பரானது 5 சீட்டரில் இருந்து சற்றே வித்தியாசமான டிசைனை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக தோற்றம் மற்றும் காட்சி அமைப்பானது இன்ஜின் அடிப்படையிலான, XUV 700 போலவே அமைந்துள்ளது. அதேநேரம், புதிய மின்சார காரானது ஏரோ-ஆப்டிமைஸ்ட் அலாய் வீல்களை கொண்டுள்ளது.

மஹிந்த்ரா XEV 9S: லெவல் 2 ADAS & பல அம்சங்கள்

மஹிந்த்ரா சார்பில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட 2 புதிய தலைமுறை மின்சார கார்களை போலவே, XEV 9S காரின் உட்புறமும் ப்ரீமியமாகவும், மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 3 ஸ்க்ரீன் செட்-அப், மஹிந்த்ராவின் ஒளிரும் லோகோ உடன் கூடிய 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், ஹெட்-அப் டிஸ்பிளே, 16 ஸ்பீக்கர் ஹர்மன்/கர்டோன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர்ஸ், பவர்ட் & வெண்டிலேடட் முன்புற இருக்கைகள், லெவல் 2 ADAS, மல்டிபிள் ஏர்பேக் உள்ளிட்ட பல நல்ல அம்சங்கள் இடம்பெற உள்ளன.

மஹிந்த்ரா XEV 9S: இருக்கை அமைப்பு

இன்ஜின் அடிப்படையிலான XUV700 போலவே, மஹிந்த்ராவின் புதிய XEV 9S மின்சார காரானது மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கையை தேர்வு செய்யும் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

மஹிந்த்ரா XEV 9S: பேட்டரி, ரேஞ்ச்

விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள XEV 9S காரானது, EV 9e மாடலில் இருப்பதை போன்றே 59KWh மற்றும் 79KWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் ரகசியமாகவே தொடரும் நிலையில், பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. டாப் வேரியண்ட்களில் ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷனும் வழங்கப்படலாம். 

மஹிந்த்ரா XEV 9S: விலை, போட்டியாளர்கள்

XEV 9S  காரின் விலையானது 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். வெகுஜன சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் முதல் 3 வரிசை மின்சார எஸ்யுவி என்பதால், ஆரம்பத்தில் இந்த காருக்கு என நேரடி போட்டி என எந்த மாடலும் இல்லை. 3 வரிசை இருக்கைகளை கொண்டு விற்பனை செய்யப்படும் கியா காரென்ஸ் க்ளாவிஸ், BYD eMax 7 ஆகிய எம்பிவிக்களின் விலையும் குறைந்தபட்சம் சுமார் ரூ.50 லட்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Car loan Information:

Calculate Car Loan EMI