2026ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், பெயர்ப் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:

மார்ச் - 2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விவரங்களடங்கிய பட்டியலில் மாணவர்களின் பெயர் சேர்த்தல் (By Transfer) / நீக்குதல் மற்றும் திருத்தங்கள் ஆகிய பணிகளுக்கு 21.10.2025 முதல் 12.11.2025 வரையிலான நாட்களிலும், 04.12.2025 / 05.12.2025 ஆகிய நாட்களிலும் மற்றும் 30.12.2025 முதல் 02.01.2026 வரையிலான நாட்களிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

Continues below advertisement

தற்போது மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. மார்ச்-2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியலினை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் பெறலாம்.

தயார் நிலையில் பெயர்ப் பட்டியல்

குறிப்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான dgeapp.tnschools.gov.in - க்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password -ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்திடுமாறு இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி மற்றும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாளை முதல் 11ஆம் வகுப்பு அரியர் மாணவர்கள் பெயர்ப் பட்டியல்

மேலும், +1 Arrear பெயர் பட்டியலினை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 24.01.2026 அன்று முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான dgeapp.tnschools.gov.in - க்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password -ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: dgeapp.tnschools.gov.in