தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தில் நடைபெற உள்ள 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று (பிப்.20) வெளியாகி உள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி என்று காணலாம்.
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 1ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 5ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி மற்றும் அடுத்தடுத்த தேதிகளில் பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று (பிப்.20) வெளியாகி உள்ளது.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
* மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
* Online Portal என்ற வாசகத்தினை “Click” செய்தால் “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH - 2024” என்ற பக்கம் தோன்றும்.
* அதில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் ஐடி, கடவுச்சொல் ஆகியவற்றைக் கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று (பிப்.19) 11, 12ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானது. இந்த ஹால் டிக்கெட்டை https://apply1.tndge.org/private-hall-ticket-revised என்ற இணைப்பை க்ளிக் செய்து பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.