Tamil Nadu 12th Result 2024: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடுகிறார்.


12ம் வகுப்பு பொதுத்தேர்வு:


தமிழ்நாடு மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவர்கள் எழுதினர். குறிப்பாக 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர். இந்த தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியாகிறது.


தேர்தல் முடிவுகளை எங்கு அறியலாம்?


இதையடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள், இன்று காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளன. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மாணவர்கள்  தங்களது தேர்வு முடிவுகளை


www.dge1.tn.nic.in , 
www.dge2.tn.nic.in , 
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in


ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். மேலும், பள்ளிகளில் மாணவர்கள் வழங்கிய, பெற்றோரின் தொலைபேசி எண்களுக்கும் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்திகளாக அனுப்ப பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.


விடைத்தாள் திருத்தம்


பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள், மார்ச் 23-ம் தேதி முதல் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 13ஆம் தேதி வரை, 86 மையங்களில் திருத்துதல் பணிகள் நடைபெற்றன.இறுதியாக, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளன. 


தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமா?


ஆண்டுதோறும் அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தேர்வு முடிவுகளை வெளியிடுவார். எனினும் தற்போது, நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நாடு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நிறைவடைந்தாலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. இந்த நிலையில், தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவதற்கு அனுமதி கேட்டு தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யப்பிரதா சாஹூவுக்குக் கடிதம் அளிக்கப்பட்டது.  இதனிடையே, சுமார் 7.8 லட்சம் மாணவர்கள் எழுதிய 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் தாமதமாக வெளியாகுமா என்று கேள்வி எழுந்த நிலையில், தாமதம் எதுவும் ஏற்படாது என்றும், தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையர் ஒப்புதல் அளித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.