Tamil Nadu 12th Result 2024 Centum Scorers: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு:
12ம் ஆண்டு வகுப்பு மாணவ, மாணவிகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளனர்.
இதில், தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெளியான தேர்வு முடிவுகள் அடிப்படையில் திருப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ஈரோடும் சிவகங்கை மாவட்டங்களும் உள்ளன. அரியலூர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு..?
தேர்வெழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை : 7,60,606
தேர்ச்சி பெற்றவர்கள் : 7,19,196
கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஒரு பாடத்தில் அதிக சதம்..!
கடந்த மே 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 22,957
இந்தாண்டு மார்ச்/ஏப்ரல் 2024 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் மொத்த எண்ணிக்கை : 26,352
அதிலும், குறிப்பாக தமிழ் மொழிப்பாடத்தில் 35 மாணவர்கள் சதம் அடித்துள்ளனர்.
முக்கிய பாடங்களில் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை:
தமிழ் | 35 |
ஆங்கிலம் | 7 |
இயற்பியல் | 633 |
வேதியியல் | 471 |
உயிரியல் | 652 |
கணிதம் | 2587 |
தாவரவியல் | 90 |
விலங்கியல் | 382 |
கணினி அறிவியல் | 6996 |
வணிகவியல் | 6142 |
கணக்குப் பதிவியல் | 1647 |
பொருளியல் | 3299 |
கணினிப் பயன்பாடுகள் | 2251 |
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் | 210 |
தமிழ்நாட்டில் மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம்..!
தமிழ்நாட்டில் மாணவியர்கள் 3,93,890 (96.44%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் என்ன..?
தமிழ்நாட்டில் மாணவர்கள் 3,25,305 (92.37%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்ச்சி பெற்றுளார்
- மாணவர்களை விட மாணவிகள் 4.07 சதவிகிதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
- 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2478.
- 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 397
- தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 5603. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 5161 (92.11%)
- தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125 தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 115 (92%).