நாடு முழுவதும் 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. நீட் தேர்வை தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவ மாணவிகள் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் தேர்வு எழுதினார்.
சேலம் நிலவரம்:
சேலம் மாவட்டத்தில் 23 மையங்களில் 11,144 மாணவ மாணவிகள், இன்று நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதில் 10,793 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர், 351 பேர் நீட் தேர்விற்கு வரவில்லை. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிற்சி எடுத்த 992 மாணவ மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுதினார். தமிழகத்தில் இன்று எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது.
தேர்வு மையங்கள்:
சேலம் சின்ன திருப்பதியில் உள்ள ஜெயராம் பப்ளிக் பள்ளி, செவ்வாய்பேட்டை, அயோத்தியாபட்டினம், அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, கொண்டலாம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள வித்தியா மந்திர் பள்ளி, நோட்டரி டேம், எம்ரால்டு வேலி, சுவாமி, தாகூர் ஆகிய பள்ளிகளிலும், சேலம் சோனா கல்லூரி, சக்தி கைலாஷ் கல்லூரி, வைஸ்யா கல்லூரி ஆகிய கல்லூரிகள் என சேலம் மாநகராட்சி பகுதியில் 18 தேர்வு மையங்களும், சேலம் மாவட்டத்தில் ஐந்து தேர்வும் மையங்கள் என மொத்தம் 23 இடங்களில் நீட் தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்:
மதியம் 2:00 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5:20 மணி வரை நடந்தது. இத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தேர்வு மையத்திற்கு காலை 11:30 மணியிலிருந்து அனுமதிக்கப்பட்டனர். பகல் 1:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பயோ மெட்ரிக் வருகை பதிவு செய்ய வேண்டும் என்பதால், அதன் பிறகு வரும் தேர்வர்கள் விதிகள்படி அனுமதிக்கப்பட மாட்டார்கள். தீவிர சோதனைகளுக்கு பிறகு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வுக்கு வரும் மாணவ மாணவிகள், அரசு வழங்கிய ஒரு அடையாள அட்டை, ஹால் டிக்கெட், ஒரு புகைப்படம் மட்டுமே கொண்டு வந்தால் போதும். பேனா, பென்சில், மொபைல் போன் போன்ற எதுவும் அனுமதிக்கப்படாது தினமும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 23 தேர்வு மையங்களில் தலா ஒரு தலைமை ஆசிரியர் தலைமையில், அறை கண்காணிப்பாளர்கள் 2 ஆசிரியர்கள் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.