பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பில் 90.07 சதவீதம் பேரும், பனிரெண்டாம் வகுப்பில் 93.76 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 17251 மாணவிகள் தேர்வு எழுதியதில் 16 ஆயிரத்து 548 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 95.92 சதவீதம் ஆகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவ மாணவிகள் மொத்தமாக 32 ஆயிரத்து 690 நபர்கள் தேர்வு எழுதியிருந்தனர். அவற்றில் 30 ஆயிரத்து 614 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 93.4 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆக இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் மாணவ மாணவிகளின் சதவீதம் 80.94. ஆங்கிலோ இந்தியன் வழியில் படித்த மாணவ-மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி. மாநகராட்சிப் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் 89.66. சுய உதவி மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 99.16 சதவீதமாக உள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.86 சதவீதமாக உள்ளது. மாவட்டம் முழுவதும் 110 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தை கொடுத்துள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 12119-பேர் தேர்ச்சி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 516 மாணவர்களும், 7ஆயிரத்து இரண்டு மாணவிகளும் 50 மையங்களில் தேர்வு எழுதினார்கள். பெருந்தோற்று ஏற்பட்டு நாட்டில் பல்வேறு சிரமங்களை மக்கள் அனுபவித்து வந்தனர். அந்த வகையில் நேரடி வகுப்புகள் மாணவர்களுக்கு நடக்காமல் இருந்தது. தற்போது நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. அதேபோல தேர்வுகளும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெற்று வந்தது. தற்போது நேரடியாக தேர்வு மையத்தில் சென்று எழுத அரசு உத்தரவிட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே மாதம் 5-ந் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வில் 6516 மாணவர்களும் 7002 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 518 பேர் தேர்வு எழுதினர்கள். தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் அரசு என்று அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இதில்13,518 தேர்வு எழுதியதில் 12,119-தேர்ச்சி பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் 31வது இடத்தில் உள்ளது. தேர்ச்சி விகிதம் 91.80 பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் மாணவர்கள் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 27, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 3. காஞ்சிபுரம் மாவட்டம் 31 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் தமிழக அளவில் 26 இடத்தை பிடித்து இருந்தது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் என்பது 87.45 சதவீதமாக உள்ளது.
100% மதிப்பெண் விபரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ் பாடத்தில் 3 பேர் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். இயற்பியலில் 6, எக்னாமிக்ஸ் 10, வேதியியலில் 12, காமர்ஸ் பாடத்தில் 27, ஆக்கவுண்டன்ட்ஸ் பாடத்தில் 68, பயலஜி பாடத்தில் 14, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 36, அக்ரிகல்ச்சர் சயின்ஸ் பாடத்தில் 44, ஆடிட்டிங் பாடத்தில் 125 ,மெக்கானிக்கல் பாடத்தில் 20, பிஸ்னஸ் மேக்ஸ் பாடத்தில் 24, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 20, கணித பாடத்தில் 26.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்