தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 30) வெளியாகி உள்ளன. இதைக் காண்பது எப்படி என்று காணலாம்.


தமிழகத்தில் 2023- 24ஆம் கல்வியாண்டில் படித்த 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8  வரை நடந்தன. இந்தத் தேர்வை 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியாகின.


ஜூலை 2 முதல் 8 வரை 10ஆம் வகுப்புத் துணைத் தேர்வு


10ஆம் வகுப்புத் துணைத் தேர்வை, தனித் தேர்வர்களும்‌ கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தனித்தேர்வர்களும்‌ எழுதினர். இந்தத் தேர்வுகள் ஜூலை 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்றன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதேபோல 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை (ஜூலை 31ஆம் தேதி) வெளியாக உள்ளன.


காண்பது எப்படி?



  • தேர்வர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

  • அதில், RESULT என்ற வாசகத்தை க்ளிக் செய்யவும்.

  • அதில், Supplementary Exam, Jun / Jul 2024 - Result - Statement Of Marks Download க்ளிக் செய்யவும்.

  • அதில், தேர்வெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, துணைத் தேர்வு முடிவுகளைக் காணலாம்.

  • கூடுதல் தகவல்களை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பதாரர்கள்‌ அறிந்துகொள்ளலாம்‌.


விடைத்தாள்‌ நகல்‌ மற்றும்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறை


ஜூன்‌ / ஜூலை 2024, மேல்நிலை துணைத்‌ தேர்வுக்கான விடைத்தாள்‌ நகல்‌ மற்றும்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தேர்வர்களுக்கான வழிமுறைகள்‌


விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ தேர்வர்கள்‌ மட்டுமே பின்னர்‌ மறு கூட்டல்‌ / மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும்‌.


மறு கூட்டல்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ மேல்நிலைத்‌ தேர்வர்கள்‌ பின்னர்‌ மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலாது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/