நடப்பாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் எழுதினர். அவர்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள் மற்றும் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். அதாவது 91.55% பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றனர்.
எனினும் இதில் மதிப்பெண்களில் திருத்தம் தேவைப்பட்ட மாணவர்கள், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில் 10ஆம் வகுப்புபொதுத் தேர்வு மறு கூட்டல் / மறு மதிப்பீடு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
மறு கூட்டல் (Re-total) மற்றும் மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ள Notification பகுதியில் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் https://tnegadge.s3.amazonaws.com/notification/SSLC/1719311109.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, இந்த விவரங்களை அறியலாம்.
இடம்பெறாத பதிவெண்களுக்கு என்ன அர்த்தம்?
மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தும் https://tnegadge.s3.amazonaws.com/notification/SSLC/1719311109.pdf என்ற இணைப்பில் உள்ள பட்டியலில் சில மாணவர்களின் பதிவெண்கள் இடம்பெற்று இருக்காது. அந்த பதிவெண்களுக்கான விடைத் தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மறு கூட்டல் / மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், மதிப்பெண் பட்டியலைப் பெற முடியும்.
முடிவுகளை அறிவது எப்படி?
* மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
* அதை க்ளிக் செய்து, தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது ?
அதே நேரத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஜூலை 2 முதல் துணைத் தேர்வு
10ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 2ஆம் தேதி தொடங்குகின்றன. ஜூலை 8ஆம் தேதி வரை இவர்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.
கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in