தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 93.40 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சை மாவட்டம் கடந்த ஆண்டு மாநில அளவில் 17-ம் இடத்தை பிடித்திருந்த நிலையில் இந்த ஆண்டு 15ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மாணவர்கள் 14,402 பேர் எழுதினர். மாணவிகள் 14,513 பேர் எழுதினர். மொத்தம் மாணவ, மாணவிகள் 28, 915 தேர்வு எழுதி இருந்தனர். இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் 13032 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 13,974 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் மாணவ, மாணவிகள் 27006 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் தேர்ச்சி 90.49 சதவீதம் ஆகும். மாணவிகள் தேர்ச்சி  96.29 சதவீதம் ஆகும். மொத்தம் 93.40% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகள் தேர்ச்சி விகிதம் தான் அதிகம் உள்ளது. தஞ்சை மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு மாநில அளவில் 17ம் இடத்தை பிடித்திருந்தது. இந்த ஆண்டு இரண்டு இடம் முன்னேறி 15ம் இடத்தை பிடித்துள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் 228 அரசு பள்ளிகளில் மாணவர்கள் 6019 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர். மாணவிகள் 6380 பேர் தேர்வு எழுதியிருந்தனர். மொத்தம் 12 ஆயிரத்து 399 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 5261 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 6006 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 11,267 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 87.41 சதவீதமாகும். மாணவிகளின் தேர்ச்சி 94.14 சதவீதமாகும். மொத்த தேர்ச்சி விகிதம் 90.87 சதவீதம் ஆகும்.